3-படகுகளை எரித்த 2 பேரை போலீசார் கைது .

Loading

புதுச்சேரி சுற்றுலாத்துறைக்கு சொந்தமான 3-படகுகளை எரித்த 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.*புதுச்சேரி ஊசுட்டேரியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநில அரசுகளுக்கு சொந்தமான பகுதி உள்ளது மேலும் புதுச்சேரிக்கு சொந்தமான பகுதியை சுற்றுலாத்துறை பராமரித்து சுற்றுலாப்பயணிகளை கவரும் வகையில் படகு சவாரி செய்யப்பட்டு வருகிறது மேலும் ஏரியில் பறவைகள் வந்து செல்வதால் மீன் பிடிக்கவும், பறவைகளை வேட்டையாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 18-ஆம் தேதியன்று ஊசுடேரியின் தமிழக பகுதியில் அனுமதியின்றி மீன் பிடிக்க மர்ம நபர்கள் விரித்து வைத்து இருந்த வலைகளை தமிழக வனத்துறையினர் புதுச்சேரி சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகில் சென்று பறிமுதல் செய்துள்ளனர். இதனையடுத்து மீன் வலைகள் பறிமுதல் செய்த நிலையில் 20-ஆம் தேதியன்று அதிகாலை ஊசுட்டேரி கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி சுற்றுலாத்துறைக்கு சொந்தமான ரூ.3 லட்சம் மதிப்பிலான 3-படகுகளை மர்ம நபர்கள் தீயிட்டு எரித்து விட்டு தப்பி ஓடினர். இச்சம்பவம் தொடர்பாக வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் படகுகளை எரித்தது புதுச்சேரி ஒட்டியுள்ள தமிழக பகுதியான வாழபட்டாம்பாளையம் பகுதியை சார்ந்த  மீன் சேகர் (எ) குணசேகர், ரகு மற்றும் காளி ஆகிய மூன்று பேர் என்பது தெரியவந்தது, இதனையடுத்து ஏரிக்கரையில் மறைந்து இருந்த மீன் சேகர் (எ) குணசேகர் மற்றும் ரகு ஆகிய இருவரையும்  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் வலைகளை பறிமுதல் செய்ய புதுச்சேரி சுற்றுலாத்துறை படகுகள் கொடுத்ததில் ஆத்திரமடைந்ததால் 3-படகுகளை எரித்ததாக தெரிவித்துள்ளனர் இதனையடுத்து கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் காலப்பட்டு மத்திய சிறையில் அடைத்த நிலையில், இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *