மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

Loading

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சேலம் மாவட்ட மாணவர் அணி சார்பில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட மாணவரணி செயலாளர் கரும்புள்ளி கவியரசன் தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தொடர் கொள்ளை மற்றும் கொலை வழிப்பறியில் ஈடுபட்டு தமிழக மக்களுக்கு அசாதாரண சூழ்நிலை ஏற்படுத்தும் வடமாநிலத்தவர்களை கண்டித்தும், கொலைக் கொள்ளை வழக்கில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து அவர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு திருப்பி அனுப்ப கூறியும், தமிழகத்திற்குள் நுழையும் போது வட மாநிலத்தவர்களுக்கு உள் அனுமதி நுழைவுச்சீட்டு முறையை வழங்க வேண்டிய கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தாரை செந்தில் குமார், தர்மபுரி மகளிர் அணி செயலாளர் மதுபாலா ,மாணவரணி மாவட்ட நிர்வாகிகள் ஆகாஷ் ,கிருஷ்ணன் பகுதி நிர்வாகிகள் சுரேஷ், ராஜ் ,கோகுல், சேகர் உட்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply