ஜாக்டோ ஜியோ கோரிக்கைகளை வலியுறுத்தி மாரச் 5-ந் தேதி மனித சங்கிலி போராட்டமும், 24-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்

Loading

திருவள்ளூர் பிப் 21 : திருவள்ளூரில் ஜாக்டோ ஜியோ சார்பில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்களுக்காக வாழ்வாதார உரிமை மீட்பு போராட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஜ.ஷேக்கபூர், பா.இராஜாஜி,   ஏ.மணிகண்டன் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜி.மெல்கிராஜா சிங் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் இளங்கோவன், ஜெகதீசன், ப.கருணாகரன், துரை.பாண்டியன், எம்.ஜம்பு, ஏ.எம்.கோவிநாதராஜ், சி.காந்திமதிநாதன், ஆர்.எஸ்.இளங்கோவன், டி.தாஸ், ம.லோகையா,  ஆர்.கணேசன், கோ.முத்துக்குமார், சி.ஜி.பிரசன்னா, கே.திருக்குமரன், சே.பிரபாகரன், ஆர்.குப்புசாமி, , ரா.காத்தவராயன், கண்ணதாசன், ராஜாசிங், ஜி.கன்னியப்பன், இராஜசேகரன் ஆகியோர் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். இதில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளரும்,  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளருமான இரா.தாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  அப்போது 1.4.2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத்திட்டத்தினை கைவிட்டு,  பழைய ஓய்வூதிய திட்டத்தை  அமல்படுத்திட வேண்டும். கால வரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை உடனடியாக வழங்க வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 428 செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.  ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையில்  பணியாற்றும் பணியாளர்கள், செவிலியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி பேசினார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ், தமிழ்நாடு அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களை அழைத்துப் பேசி உரிய தீர்வு காண வேண்டும். இந்த் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 5-ந் தேதி மனித சங்கிலி போராட்டமும்,  24-ந் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தார். இந்த மாநாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் உறுப்பினர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *