ஏப்ரல் 14-ல் வெளியாகும் சமந்தாவின் ‘சாகுந்தலம்’

Loading

சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘சாகுந்தலம்’ படம் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தேதி மாற்றப்பட்டு ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.‘யசோதா’ திரைப்படத்திற்கு பிறகு நடிகை சமந்தாவின் நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘சாகுந்தலம்’. சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள இப்படத்தை குணசேகர் இயக்கியுள்ளார். மலையாள நடிகர் தேவ் மோகன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.தில்ராஜுவின் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் வெளியிடும் இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார். இந்தப் படம் கடந்த ஆண்டு நவம்பர் 4-ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட தேதியில் படம் வெளியாகவில்லை.ஒட்டுமொத்த படத்தையும் 3டி தொழில்நுட்பத்தில் மாற்ற உள்ளதால் படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்படுவதாக படக்குழு தெரிவித்திருந்தது. பான் இந்தியா முறையில் 3டி தொழில்நுட்பத்தில் உருவான இப்படம் பிப்ரவரி 17-ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதன் தேதி மாற்றப்பட்டது. தற்போது படம் ஏப்ரல் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0Shares

Leave a Reply