உளுந்தூர்பேட்டை அருகே 8-ம் வகுப்பு மாணவி கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்தார்
![]()
உளுந்தூர்பேட்டை அருகே 8-ம் வகுப்பு மாணவி கிணற்றில் தவறிவிழுந்து உயிரிழந்தார்.
உளுந்தூர்பேட்டை. ஜனவரி 11,கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் ராஜேஸ்வரி வயது (13), ராஜேஷ் வயது 17, ஆகிய இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.இவரது தாய் தந்தையினர் டெல்லி கூலிவேலை செய்து வருகின்றனர்.அதனால் ராஜேந்திரன் என்பவரின் தாயார் அழகம்மாள் வயது சுமார் 70 என்பவரிடம் பாதுகாப்பில் இருந்து படித்து வருகின்றனர்.
இந்தநிலையில் தனியார் பள்ளியில் 8- வகுப்பு படிக்கும் ராஜேஸ்வரி வயது 13 என்பவர் படிக்கவில்லை என்று பாட்டி அழகம்மாள் என்பவர் அறிவுரை கூறியதாகவும் இதனால் ராஜேஸ்வரி தனது பாட்டியிடம் கோபித்துக் கொண்டு வீட்டின் பின்புறம் உள்ள தரை கிணற்றில் குளிக்கபோவதாக சொல்லிவிட்டு சென்றவர் யாருக்கும் தெரியாமல் குதித்து இருக்கிறார். அதன் பின்னர் தனது பேத்திக்கு நீச்சல் தெரியாது நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் ஏற்பட்டு கிணற்றில் பார்க்கும் போது பெண்ணின் செருப்பு மட்டும் கிணற்று தண்ணீரின் மேல் மிதந்து கிடந்ததைக்கண்டு அதிர்ந்து போய் கத்தி கூச்சலிட்டனர்.உடனே அங்கு கூடியிருந்த பொதுமக்கள் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோக்குமார் அவர்களுக்கும், உளுந்தூர்பேட்டை தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக போராடி தீயணைப்பு வீரர்கள் பிரேத கிணற்றில் இருந்து எடுத்தனர்.
பின்னர் திருநாவலூர் போலீசார் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம்முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக திருநாவலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.உளுந்தூர்பேட்டை அருகே கிணற்றில் தவறிவிழுந்த ராஜேஸ்வரி யின் பிரேதத்தை தீயணைப்பு வீரர்கள் மீட்ட போது எடுத்த படம்.

