தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார் ஜான்வி
தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார் ஜான்வி
தயாரிப்பாளர் போனி கபூர்- மறைந்த நடிகை தேவி ஆகியோரின் மூத்த மகள் ஜான்வி கபூர். இவர் 2018-ம் ஆண்டு வெளியான ‘தடக்’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து, தென்னிந்திய ரீமேக் படங்களில் கவனம் செலுத்தி வரும் அவர், தமிழ், தெலுங்கு படங்களில் அறிமுகமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், “தென்னிந்திய சினிமாவில் விரைவில் அறிமுகமாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார். அது தமிழ்ப் படமா, தெலுங்கு படமா என்பதை அவர் தெரிவிக்கவில்லை.