மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான குழுக்கூட்டம்

Loading

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான சமவாய்ப்பு மற்றும் சமஉரிமை, செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கங்க பிரதிநிதிகள், தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகளுடனான மாவட்ட அளவிலான குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் க.வீ.முரளீதரன்  தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டைகளின் எண்ணிக்கை, தனித்துவமான அடையாள அட்டை(UDID) வழங்கப்பட்டுள்ள எண்ணிக்கை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத்திட்டம், அண்ணா மறுமலர்ச்சித்திட்டம், கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயனடைந்த பயனாளிகளின் எண்ணிக்கை,மேலும், சுய தொழில் தொடங்கிட அரசு மானியத்துடன் கூடிய கடனுதவி, மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், கல்வி உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை, திருமண உதவித்தொகை வழங்கும் திட்டம், காதுகேளாத மனவளர்ச்சி குன்றிய 0 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு அடிப்படை பயிற்சி, பேருந்து பயண சலுகை, சக்கர நாற்காலிகள், மின்கல சக்கர நாற்காலிகள், இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட மோட்டார் வாகனம், நவீன செயற்கை கை மற்றும் கால், நவீன காதொலி கருவி, முடம் நீக்கும் சாதனம் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து வழங்கப்பட்ட விபரங்கள், வழங்கப்பட வேண்டிய விபரங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து, அத்துறையில் தனிக்கவனம் செலுத்தி மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுகின்ற வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து, செயல்படுத்தி வருகிறார்கள். மாவட்டத்தில் 21,476 மாற்றுத்திறனாளிகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது, மேலும், தனித்துவமான அடையாள அட்டை (UDID) வேண்டி 15,795 விண்ணபத்திருந்திருந்தவர்களில் 15,207 நபர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைவழங்குவதற்கானநடவடிக்கைகளைமேற்கொள்ளவேண்டும்.மேலும்,மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பு அளித்திடவும், அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற சூழலை உருவாக்கிடவும், அனைத்து துறைகளின் கீழ்  மாற்றுத்திறனாளிகளுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்களின் கீழ் தனிக்கவனம் செலுத்தி முன்னுரிமை வழங்கிடவும் துறை அலுவலர்கள், தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (மு.கூ.பொ) சந்திரசேகர், அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கங்க பிரதிநிதிகள், தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *