பெண்ணைசீரழித்த தந்தை&சகோதரன்14ஆண்டு சிறை

Loading

சென்னை தண்டையார்பேட்டையில் இளம்பெண்ணை சீரழித்த தந்தை, சகோதரனுக்கு  தலா 14 ஆண்டுகள், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு :

திருவள்ளூர் டிச 12 : சென்னை தண்டையார்பேட்டையில் கடந்த 2020 முதல் 2023ம் ஆண்டு வரை 18 வயது பெண்ணை தந்தையும், சகோதரரும் பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர். இதுகுறித்து அந்த பெண் 2023ம் ஆண்டு டிசம்பர் 28 ம் தேதி கொடுத்த புகாரின்படி திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் விஜயலட்சுமி ஆஜராகி வாதாடினார். விசாரணையில் நீதிபதி உமாமகேஸ்வரி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தந்தை, சகோதரன் இருவருக்கும் உறவினர் மற்றும் ரத்த சம்பந்த உறவுமுறை என்ற இரு பிரிவுகளின் கீழ் தலா 14 ஆண்டுகள் சிறையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
மேலும் இளம்பெண்ணுக்கு 5 லட்சம் ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டுமெனவும் பரிந்துரை செய்தார். இதையடுத்து இருவரையும் திருவொற்றியூர் போலீசார் சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
0Shares