ரயில்வேமேம்பாலத்தில் பைக்,லாரி மோதிமுதியவர்பலி

Loading

திருவள்ளூர் ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த பைக் மீது லாரி மோதி விபத்து : 70 வயது முதியவர் உயிரிழந்த பரிதாபம் :

திருவள்ளூர் டிச 12 : திருவள்ளூர் ரயில்வே மேம்பாலப் பகுதியில் இரு சக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் அதிகத்துார் முதியவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை வருகி்ன்றனர். கடம்பத்துார் ஒன்றியம் அதிகத்துார் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி (70)  எல்.ஐ.சி. ஏஜென்டாக பணிபுரிந்து வரும் இவர்  தனது டி.வி.எஸ். ஸ்கூட்டி பெப் இரு சக்கர வாகனத்தில் திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது ரயில்வே மேம்பாலத்தில் வந்துகொண்டிருந்த போது பின்னால் வந்த டிப்பர் லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே முதியவர் முத்துசுவாமி பலியானார்.  தகவலறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து இவரது மகன் விஜய் கொடுத்த புகாரின்படி திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகி்னறனர். விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான முதியவரின் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
0Shares