சென்னை வள்ளுவர் கோட்டத்தில் டெஸ்ட் பர்சேஸ் முறையை நிறுத்த போராட்டம் நடைப்பெற்றது.

Loading

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் டெஸ்ட் பர்சேஸ் முறையை நிறுத்த வலியுறுத்தி  தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை மாநில தலைவர் அ.முத்துக்குமார் தலைமையில் கவனஈர்ப்பு போராட்டம் நடைப்பெற்றது.  டெஸ்ட் பர்சேஸ் முறையில் அபராதம் விதிக்கப்படுவதை கைவிட்டு,அனைத்து சிறு கடைகளிலும் பில் போடுவதற்கான ஏற்பாடுகளை செய்ய கால அவகாசம் அளிக்க வேண்டும் என தமிழ்நாடு வியாபாரிகள் சங்கப்பேரவை மாநில தலைவர் அ.முத்துக்குமார் வலியுறுத்தி உள்ளார் பேசிய தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாநில தலைவர் அ.முத்துக்குமார்.அவர் காலகட்டத்தில் இந்திய வர்த்தகமே அதிகாரி கைகளில் இருந்தது.வணிகர்களின் அடிமைத்தனத்துடன் நடத்திய காலக்கட்டத்தில் இருந்து சங்கமாக ஒருங்கிணைந்து அதிகாரிகள் கோரிக்கை வைக்கப்பட்டது. ஜி.எஸ்.டி செலுத்திதான் அனைத்து பொருட்களையும் வாங்குகிறோம். அந்நிய முதலீட்டை பயன்படுத்தி சிறுவணிகர்களை அழிக்க பார்க்கின்றனர்.இந்த பிரச்சினையில் உரிய கவனம் செலுத்தி முதலமைச்சரும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விற்பனை இலக்கு கீழ் உள்ள ஒரு சில கடைகளில் பில் போட வேண்டிய அவசியம் இல்லை. பில் போட்டால் தான் நாங்கள் மக்களிடம் வரி வசூலிக்க வேண்டும்.
ஜி.எஸ்.டி வரி போன்ற தாக்கத்தில் இருந்து வெளிவர சிறுவியாபாரிகளுக்கு சில காலம் ஆகும்.அதற்கான கால அவகாசத்தை அளிக்க வேண்டும். மளிகைக் கடைகளில் சோதனை செய்வது போல்டாஸ்மாக்கடைகளிலும்சோதனசெய்வேண்டும்.இதற்கு முந்தைய முதலமைச்சர்கள் புரட்சிதலைவி அம்மா,கலைஞர்,பழனிசாமி ஆகியோர் எங்கள் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.இப்போது உள்ள முதலமைச்சர் எங்களை சந்திக்கவே இல்லை. அபராதம் விதிக்க வேண்டும் என இலக்கு வைத்து அதிகாரிகள் செயல்படுகிறார்கள் எனத் தெரிவித்தார்
0Shares

Leave a Reply