பழனியில் புதிய மருத்துவமனை திறப்பு விழா
![]()
பழனியில் கோவையை சேர்ந்த பிரபலமான எல்சி மருத்துவமனை பழனியில் இன்று துவக்கப்பட்டது. கோவை அரசு மருத்துவக்கல்லூரி டீன் நிர்மலா கலந்துகொண்டு மருத்துவமனையை திறந்து வைத்தார். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் புதியதாக எல்சி மருத்துவமனை திறப்புவிழா இன்று நடைபெற்றது. கோவையில் பிரபலமான எல்சி மருத்துவமனையின் கிளை பழனியில் திறக்கப்பட்டது. கோவையில் பிரபலமான வயிறு மற்றும் மகளிர் நலன் சார்ந்த உடல் உபாதைகளுக்கான சிறப்பு மருத்துவர் ராஜன் மற்றும் வித்யா ராஜன் ஆகியோர் தலைமையில் இயங்கும் இந்த மருத்துவமனையை கோவை அரசு மருத்துவக்கல்லூரி டீன் நிர்மலா மருத்துவமனையை திறந்துவைத்தார். வயிறு தொடர்பான பிரச்சினைகளுக்கு கோவை அல்லது மதுரை ஆகிய ஊர்களுக்கு மட்டுமே செல்லவேண்டிய நிலையில் தற்போது பழனியிலேயே மருத்துவம் பார்த்துக்கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிகழ்ச்சியில் பழனி நகர்மன்ற தலைவர் உமாமகேஷ்வரி, துணைத்தலைவர் கந்தசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


