மாற்றுதிறனாளிகளுக்கு செயற்க்கை கை,கால்கள் வழங்கும் விழா.
![]()
குருதேவா அறக்கட்டளையின் கீழ் எழும்பியல் அறுவை சிகிச்சை மையம் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு செயற்க்கை கை,கால்கள் வழங்கும் விழா.சென்னை வில்லிவாக்கத்தில் ஸ்ரீ குருதேவா அறக்கட்டளையின் சார்பாக மிசோரம் கவர்னர் கே.ஹரிபாபு தலைமையில் அறக்கட்டளையின் கீழ் நிறுவப்பட்ட ட்ராமா சென்டர் மற்றும் புற்று நோயாளிகளுக்கான நூறு படுக்கை வசதிகொண்ட மருத்துவமனையின் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.இதில் இந்திய அரசின் முன்னாள் மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் கே.வி.சௌத்ரி மற்றும் கீஸ்டோன் இன்ஃப்ரா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் எம்.டி.மாதவ் ரமேஷ் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாக பங்கேற்று விழாவை சிறப்பித்தனர்.ஆந்திர மாநிலம்,விஜயநகரம் மாவட்டம்,கொத்தவலசா மண்டலம்,மங்களபாலத்தில் உள்ள ஸ்ரீ குருதேவா அறக்கட்டளையின் கீழ் நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்களுக்காக மேம்பட்ட எலும்பியல் அறுவை சிகிச்சை அரங்குகள் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை,கால்கள் வழங்கப்பட்டது.

