முத்து நகரின் முதல்* *போராளியின்* *பிறந்த நாள் விழா*

Loading

முத்துக்குளித்துறையின் 16ஆவது மன்னரான சி.சி.தொன் கபிரியேல் தெக் குரூஸ் வாஸ் கோமஸ் பரதவர்ம பாண்டியனின் 269 ஆவது பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது.
டச்சுப்படை, கிழக்கிந்திய நிறுவனத்தின் படை என இரு அரசுகளை எதிர்த்துப் போரிட்டவர் இவர். வீரபாண்டிய கட்டபொம்மனுக்குக் கப்பல் கொடுத்தவர், ஊமைத்துரை, மருது சகோதரர்களுக்கு ஆயுதம் கொடுத்து புரட்சிப்படைக்குப் பேருதவி புரிந்தவர்.
தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்திலிருக்கும் தங்கத் தேரை செய்து தந்த இவரை, மக்கள் தேர்மாறன் என்று அழைக்கின்றனர். இம்மன்னரின் கல்லறை லசால் பள்ளியின் மைதானத்தில் உள்ளது.
இம்மன்னரின் பிறந்த நாள் விழா தையல் மிஷின், குடங்கள், சேலை என நானூறு பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வுக்குத் தொழிலதிபர் பீட்டர் பர்னாண்டோ தலைமை வகித்தார்.
கோரமண்டல் சமூக நற்பணி மன்றத்தின் ரோமால்டு, முத்துக்குளித்துறை பரதர் நலச்சங்கத்தின் ஜான்சன், பியோ பரதர்,  எழுத்தாளர் பீட்டர் பிரான்சிஸ், தேவ் ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மீனவ மக்கள் கட்சியின் தலைவர் அலங்கார பரதர் தையல் மிஷினையும், பேராசிரியை பாத்திமா பாபு குடங்களையும், இந்திய மீனவர் சங்கத்தின் ராஜீ பரதர் சேலைகளையும் வழங்கினர்.
இந்நிகழ்வில் குருஸ் பர்னாந்து நற்பணி மன்றத்தின் சசிக்குமார், சேவியர் சில்வர, டெரன்ஸ், கல்யாண சுந்தரம், அலாய், அமலன்,
சேரானந்தம், சுடலைமுத்து, தராஜ், பிரைட்டன், தினேஷ், ஆனந்த் பாண்டியன், வர்கீஸ், பிரவின், சல்வடோர், இனிகோ, U.S.தினேஷ், கிரிஸ்டோ, ராஜா, சுரேஷ், வளன், ஆண்ட்ரூஸ், அரவிந்த், நிஷாந்த், கென்னடி, ஜே.பி., மற்றும் பாத்திமா நகர், திரேஸ்புரம், குரூஸ்புரம், லூர்தம்மாள்புரம், லயன்ஸ்டவுன், இனிகோ நகர், காந்திநகர், மரக்குடி தெரு, மாதா கோவில்தெரு இளைஞர்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வுக்கு வந்தோரை ஹெர்மென் கில்டு வரவேற்றார். எழுத்தாளர் ஆசிரியர் நெய்தல் அண்டோ சிறப்புரை நிகழ்த்தினார். எட்வின் பாண்டியன் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்வைக் குரூஸ் பர்னாந்தீஸ் நற்பணி மன்றத்தினர், நெய்தல் எழுத்தாளர்கள் –  வாசகர்கள்   இயக்கம், தேர்மாறன் பரதர் நலச்சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *