திருவள்ளூரில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Loading

திருவள்ளூர் நவ 06 :

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி சாலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுவர்ணாபாய் தலைமை வகித்தார். இதில் மாவட்ட துணைத் தலைவர்கள் சிவலிங்கம், ஜெயசீலன், ஈஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாவட்ட செயலாளர் தா.முருகன் வரவேற்றார். இதில் மாநில துணைத்தலைவர் அமுதவள்ளி கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துக் கூறி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். அகவிலைப்படி உயர்வு, தேசிய கல்விக் கல்விக் கொள்கை 2020 ரத்து, இடை நிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்குதல் உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாவட்ட செய்தி தொடர்பாளர் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிறைவாக மாவட்ட பொருளாளர் பாலசுந்தரம் நன்றி கூறினார்.

0Shares

Leave a Reply