நாகர்கோவில் அருகே உள்ள வைத்தியநாதபுரம் பகுதியில் சொத்தை அபகரிக்க முயற்சி… கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள வைத்தியநாதபுரம் பகுதியை சார்ந்தவர் லிங்கம் இவருக்கு நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் 66 சென்ட் நிலம் உள்ளது. மேலும் நிலத்தை சுத்தி சுவரும் கட்டப்பட்டுள்ளது.
நிலத்தின் அருகில் கிருஷ்ண பெருமாள் என்பவருக்கு சொந்தமான நிலமும் உள்ளது இது சம்பந்தமாக நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்த நிலையில் வழக்கு தள்ளுபடி ஆனது. இந்நிலையில்
நேற்று காலை கிருஷ்ண பெருமாள் மேலும் சிலரும் சேர்ந்து லிங்கத்துக்கு சொந்தமான இடத்தில் உள்ள சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டிருந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த லிங்கம் தடுக்கவே எதிர் தரப்பினர் லிங்கத்தை தாக்க முற்பட்டுள்ளனர். இந்நிலையில் லிங்கம் தன்னுடைய சொத்தை அபரிக்க முயற்சிப்பதாகவும் மேலும் என்னுடைய சொத்தை இடித்து என்னை தாக்க வந்ததாகவும் என்னுடைய உயிருக்கு எதிர் தரப்பினரால் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் கோட்டார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் கோட்டாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.