தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற்றது,
கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் அவர்கள் தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகளை நேரடியாக ஆட்சியர் பெற்றுக் கொண்டார். முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விவசாயிகளால் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். மேலும் சத்துணவுத் திட்டத்தின் மூலம் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் பாலத்துறை அரசு நடுநிலைப்பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையினை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ், வேளாண்மைத்துறை பொருப்பு இணை இயக்குநர் சபி அகமது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்தீபன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ்செல்வி மற்றும் துறை சார்ந்த அரசு அதிகாரிகள் விவசாயிகள் கலந்து கொண்டனர்.