கோவை நவ இந்தியா  பகுதியில் உள்ள ஆகாஷ் அகாடமி வளாகத்தில் நீட் தேர்வில், பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி இன்று, நடைபெற்றது 

Loading

மருத்துவ படிப்பில் சேருவதற்கு முக்கிய தகுதியாக நீட் தேர்வை மத்திய அரசு கொண்டு வந்து அதனை நடைமுறை படுத்தி உள்ளது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த ஜூலை  மாதம் நடைபெற்றது. இதற்கான ரிசல்ட் நேற்று இரவு  வெளியிட பட்டது. இந்த தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தமிழகம் முழுவதும் ஆகாஷ் நீட் பயிற்சி மையம் தங்களது கிளைகளை விரிவு படுத்தி பயிற்சியளித்து வருகின்றது. மேலும் பைஜூஸ் நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கு நீட் பயிற்சியை அளித்து வருகின்றது, அவ்வாறு பயிற்சி அளிக்க பட்ட மாணவர்கள் நீட் தேர்வில் சிறந்த இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளனர். நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இன்று மாணவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குஜராத் மாநிலத்தை சேர்ந்த
வட்ஷா ஆஷிஸ் பத்ரா என்பவர், 720 மதிப்பெண்ணுக்கு 715 எடுத்து, இந்திய அளவில்  2ம் இடம் பிடித்துள்ளார். மேலும் மும்பையை சேர்ந்த  ரிஷிகேஷ் கங்குளே, 720 மதிப்பெண்களுக்கு 715 மதிப்பெண்கள் எடுத்து  இந்திய அளவில்  3ம் இடம் பிடித்துள்ளனர். இவர்கள் இன்று கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஆகாஷ் அகாடமி கிளைக்கு வருகை தந்தனர். அவர்களுக்கு மேளதாளம் முழுங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கோவையை சேர்ந்த
கிருத்திக் 720 க்கு 695, மதிப்பெண் எடுத்து இந்திய அளவில் 135 இடம் பிடித்துள்ளார். கோவையை சேர்ந்த
ப்ரித்வின்சிபி 720 க்கு 690 மதிப்பெண்கள் எடுத்து  இந்திய அளவில் 270 இது இடம் பிடித்துள்ளார். இவர்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி கோப்பைகள் வழங்கபட்டது. இதனை தொடர்ந்து இதனை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆகாஷ் குழுமங்களின் கோவை மற்றும் ஈரோடு கிளை மேலாளர்,
மலர் செல்வன், ஆர் எஸ் புரம் கிளை மேலாளர், முகமது ரபி,
ஆகாஷ் அகாடமியின், துணை இயக்குனர், சீனிவாச ரெட்டி, ஆகாஷ் அகாடமியின் மெடிக்கல் தலைவர், பூரண ராவ், மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply