சென்னை ஆதியப்பா தெருவில் உள்ள ஸ்ரீ கன்னிகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் கலாலயா ஃபைன் ஆர்ட்ஸ் அசோசியேஷான் மற்றும் ஸ்நிக்தா துறைகளுக்கிடையான புதிய மாணவர்களுக்கான கலாச்சார விழா
![]()
சென்னை ஆதியப்பா தெருவில் உள்ள ஸ்ரீ கன்னிகா
பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர்
கல்லூரியில் கலாலயா ஃபைன் ஆர்ட்ஸ்
அசோசியேஷான் மற்றும் ஸ்நிக்தா
துறைகளுக்கிடையான புதிய மாணவர்களுக்கான
கலாச்சார விழா கல்லூரி வளாகத்தில்
கொண்டாடபட்டது.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக பின்னனி பாடகர் எஸ்.ஏ.எம்.சாம் விஷால் ஜே.எக்ஸ்,குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இதில் கரஸ்பாண்டட் கோகிலம் ரமேஸ்,கல்லூரி முதல்வர் டாக்டர் டி.மோகன ஶ்ரீ,துனை முதல்வர் பி.பி.வனிதா மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் மாணவர்களும் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சி தொடங்கியது.
நிகழ்வில் மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிபடுத்தும்
விதமாக மேடை நாடகங்கள்,குழு நடனம்,யோகா,சிலம்பம்,குழு பாடல்கள் மற்றும் சிறப்பு திறமைகளை வெளிபடுத்தினர்.வெற்றி பெற்ற
மாணவர்ளை பாராட்டும் விதமாக பின்னனி பாடகர் சாம் விஷால்,பாலா ஶ்ரீ,ஆநாத்,சபரிஸ் ஆகியோர் மாணவர்களை பாராட்டி கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கினர்.
இதில் ஆசிரியர்கள் கல்லூரி
மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.

