கோவை தொண்டாமுத்தூர் அடுத்த தென்னமநல்லூர் பகுதியில், ஓணம் பண்டிகை கொண்டாடி விட்டு வரும் வழியில் ஏற்பட்ட விபத்தில், 3 பேர் உயிரிழப்பு

Loading

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த 18 வயதான, ரோஷன், தனது நண்பர்களுடன் நேற்று சிறுவாணி சாலையில் உள்ள தனியார் கிளப்பில் ஓணம் பண்டிகையை கொண்டாடிவிட்டு இன்று அதிகாலை காரில் தனது நண்பர்களுடன் வீடு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது தென்னமநல்லூர் பகுதியில் உள்ள ஒரு வளைவில் திருப்பும் போது கட்டுப்பாட்டை இழந்த கார் மாரப்ப கவுண்டர் என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் இரும்பு கேட்டை உடைத்து கொண்டு சுமார் 120, அடி ஆழம் கொண்ட கிணற்றில் விழுந்துள்ளது.
இதில் காரை ஓட்டி வந்த ரோஷன் கதவை திறந்து வெளியே விழுந்து விட, உடன் வந்த நண்பர்களான 18 வயதான ஆதர்ஷ், 18 வயதான  விவேக்பாபு, 18 வயதான நந்தனன்  ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
அவர்கள் அனைவரும் கோவையில் வெவ்வேறு தனியார் கல்லூரியில் பயின்று வருகின்றனர்  இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் காரையும், நீரில் மூழ்கி உயிரிழந்த உடல்களை  மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
0Shares

Leave a Reply