பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம் 50வது ஆண்டு திருவிழா
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம் 50வது ஆண்டு திருவிழா
கொடி ஏற்றதுடன் இன்று துவங்குகிறது
சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி திருக்கோவிலில் 50வது ஆண்டு திருவிழா வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 8ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியின் துவக்கமாக ஆகஸ்ட் 29ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 5.45 மணிக்கு 12 அடி நீளம் உள்ள திருக்கொடி பெசன்ட் நகர் முழுவதும் பவணியாக கொண்டுவரப்பட்டு கோயில் வளாகத்தில் உள்ள 75 அடி உயர கொடி கம்பத்தில் ஏற்றப்படும். சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் டாக்டர் ஜார்ஜ் அந்தோணிசாமி கொடியை ஏற்ற உள்ளார்.
பெசன்ட் நகர் வேளாங்கண்ணி திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாவானது ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு “அன்னை மரியின் வழியில் கூட்டு ஒருங்கியக்கப் பயணம்” என்ற மையக்கருத்தின் அடிப்படையில் கொண்டாடப்பட உள்ளது. திருவிழா நடைபெறும் 11 நாட்களும் உழைப்பாளர்கள் தினம், ஆசிரியர்கள் தினம், குடும்ப தினம், என சிறப்பு தினங்களாக கொண்டாடப்பட உள்ளனர். மேலும் திருவிழா நடைபெறும் நாட்கள் முழுவதும் காலையிலிருந்து மாலை வரை இறை வழிபாடுகள் நடைபெறும்.
கோவிலுக்கு வருகை புரியும் பக்தர்களின் தேவையை அறிந்து பாதுகாப்பை கருத்தில் கொண்டும் சென்னை காவல்துறை சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து வரக்கூடிய பக்தர்களுக்கு வசதியாக பெசன்ட் நகருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க மாநகர போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.
350 மேற்ப்பட்ட தன்னார்வலர்கள் மூலம் பக்த்தர்களின் சேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும். 1000 காவல்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சி.சி.டி.வி மற்றும் ட்ரோன்கள் மூலம் நிகழ்வுகள் முழுவதும் தொடர்ந்து கண்காணிக்கப்படவுள்ளனர். கடலுக்கு மக்கள் செல்லாத வகையில் தடுப்பு வேளிகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை காவல்த்துறை சார்பில் மருத்துவம், சுகாதாரம், பாதுகாப்பு என அனைத்து ஏற்ப்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
ஆண்டு தோறும் நடைபெறும் இந்த வேளாங்கண்ணி திருக்கோவில் திருவிழாவானது கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் காரணமாக கொண்டாடப்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.