அனைத்து எம்சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வில்லை என்றால் தமிழகம் முழுவதும் மணல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் தெரிவித்துள்ளார்…
அதிக பாரம் ஏற்றும் நிறுவனங்களையும் லாரிகளையும் தடுக்கத் தவறிய போக்குவரத்து துறை அதிகாரிகளை கண்டித்து அனைத்து எம் சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்றது…
அந்த கூட்டமைப்பை சார்ந்த லாரி உரிமையாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்ட இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில்,
மணல் லாரிகளில் அதிக பாரம் ஏற்றச் சொல்லும் நிறுவனங்கள் மற்றும் செங்கல் லாரிகளுக்கு தடை விதித்து குவாரிகளின் உரிமைகளை ரத்து செய்திட வேண்டும்…
போக்குவரத்து துறையில் நடைபெறும் முறைகேடுகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழக முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…