கன்னியாகுமரி மாவட்டம் :- பெருந்தலைவர் காமராஜர் 120 வது பிறந்தநாள் விழா
கன்னியாகுமரி மாவட்டம் :- பெருந்தலைவர் காமராஜர் 120 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் இறச்சகுளம் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் பொது சேவை மையத்தின் தலைவர் சமூக சேவகர் T.ராணி தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது பின்பு ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
பின்பு தொடர்ந்து பத்து மணி நேரம் பத்து நிமிடம் பத்து வினாடிகள் நிறுத்தாமல் சிலம்பம் விளையாடி (Book of World record)ல் இடம் பிடித்த விளையாட்டு வீரர்களின் சிலம்பு நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்ச்சியில் கணேசன், சொக்கலிங்க பிள்ளை,அப்பன் பிள்ளை, நீலகண்ட ஜெகதீஷ் , மகாராஜன்,மணிகண்டன், பெருந்தலைவர் காமராஜர் பொது சேவை மையத்தின் செயலாளர் ஐயப்பன், இணைச்செயலாளர் தங்கம் ,பொருளாளர் அருண்பாண்டியன் உள்ளிட்டவர் கலந்து கொண்டனர்