இன்றைய ராசி பலன்கள்

Loading

மேஷம்

சீட்டுப் போட்டு சேர்த்த பணத்தைக் கொண்டு நகைகள் வாங்குவீர்கள். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடக்கும். ஆன்லைன் வர்த்தகங்களில் லாபத்தை அள்ளுவீர்கள். பைனான்ஸ் தொழிலில் பக்குவமாக நடந்து கொள்ளுங்கள். மனைவி பெயரில் புதிய இடம் வாங்கி பத்திரம் போடுவீர்கள். ஐடி ஊழியர்கள் அபாரமாகத் திறமையைக் காட்டி சம்பள உயர்வு பெறுவார்கள்.

ரிஷபம்

அடுத்தவர் பேச்சை நம்பி அதிக முதலீடு செய்ய வேண்டாம். எதிர்பார்த்த காரியம் நடக்கவில்லை என்று வருந்தாதீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் தாமதமாகக் கிடைக்கும். சகோதர உறவுகளால் சச்சரவு உண்டாகும். மனம் ஒரு நிலையில் இருக்காது. தொழிலுக்குத் தேவையான பணம் வரும். வியாபாரம் சுமாராக நடக்கும். அரசுத்துறையில் உள்ளவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.

மிதுனம்

தேவையில்லாத பிரச்சனைகளில் மூக்கை நுழைக்காதீர்கள். அடிதடி சம்பவங்கள் நிகழலாம். போலீஸ் ஸ்டேஷன் போவதற்கான வாய்ப்பும் உண்டு. வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. வாகனத்தை நிறுத்தும் போது சாவியைக் கையில் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லை என்றால் களவு போக வாய்ப்பிருக்கிறது. சகோதரி வகையில் செலவு உண்டு.

கடகம்

மங்களகரமான நிகழ்ச்சிகள் மனம் இனிக்க நடக்கும். விவசாய வேலைகளில் முனைப்புடன் இறங்குவீர்கள். பழைய கடனை அடைப்பீர்கள். வியாபாரிகள் பொருட்களைச் சுலபமாக விற்பார்கள். தொழிலில் மிகச்சிறந்த முன்னேற்றம் ஏற்படும். ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் நேர்த்தியாக நடக்கும். குடும்பத்தில் இருந்த விரிசல் விலகும்.

சிம்மம்

சாதுரியமாகப் பேசி சம்பாத்தியத்தை அதிகரிப்பீர்கள். அரசு வேலையில் அக்கறையாக நடந்து பாராட்டுச் சான்றிதழ் பெறுவீர்கள். முதலாளிகளின் பாராட்டு உற்சாகத்தைத் தரும். அரசு ஒப்பந்தம் கிடைக்கும். காண்ட்ராக்ட் வேலைகள் கைக்கு வரும். நிலம் வாங்கி விற்கும் தொழில் வளமாக நடக்கும். பிரியமானவர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

கன்னி

குடும்பத்துடன் கொடைக்கானல் போன்ற இடங்களுக்குச் செல்வீர்கள். தந்தையார் வழியில் கணிசமான பணம் கிடைக்கும். இழுபறியாக இருந்த வழக்குகள் உங்களுக்குச் சாதகமாக முடியும். சிலநேரம் முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். மருந்து, உபரிப் பாக விற்பனையாளர்கள் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள். தைரியத்துடன் செயல்படுவீர்கள்.

துலாம்

நண்பருக்கு இடையே எழுந்த சின்ன வாக்குவாதம் பிரிவை உண்டாக்கும். வேலை காரணமாக குடும்பத்தைப் பிரிந்து வெளியூர் செல்வீர்கள். வியாபாரத்தில் சறுக்கல் நிலையே காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி தொழில் சுணக்கமாக நடக்கும். பிள்ளைகளின் செய்கையால் பெற்றோர்கள் அவமானப்பட நேரும். சந்திராஷ்டம நாள். எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்

மற்றவர்கள் விமர்சனங்களை ஊதித் தள்ளுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளைப் பேசிக் களைவீர்கள். உறவுகளைத் தேடிச் சென்று வீட்டிற்கு அழைப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டம் போடுவீர்கள். அந்நியரின் தலையீட்டை அனுமதிக்க மாட்டீர்கள். வெளிநாட்டில் இருந்து தேவையான உதவி கிடைக்கும்.

தனுசு

குடும்பத்திலுள்ளவர்களிடம் கோபத்தைக் காட்டாதீர்கள் ஆத்திரத்தைக் குழி தோண்டி புதைத்து விடுங்கள். உங்கள் நிம்மதியைக் கெடுக்க சிலர் முயற்சி செய்வார்கள். அதற்கு இடம் கொடுக்காதீர்கள். வெளியூர் பயணங்களின்போது பணம் பத்திரம். கண்ட இடத்தில் சாப்பிடாதீர்கள். உடல் பாதிப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

மகரம்

உங்கள் வேலையைக் காலி செய்ய முயற்சி நடக்கிறது. பொறுப்பாக நடந்து கொள்ளுங்கள். அவசியத் தேவைக்காக அலைச்சல் அதிகமாகி உடல்நிலை பாதிப்பு உண்டாகும். மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுக் கொள்ளுங்கள். தொழிலில் இருந்த தடைகள் விலகி ஓடும். அரசு வழியிலான எதிர்பார்ப்பு தாமதமானாலும் இறுதியில் உங்களுக்குத்தான் வெற்றி கிடைக்கும்.

கும்பம்

பொருளாதார முன்னேற்றம் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். வியாபாரத்தில் இரண்டு மடங்கு லாபத்தைப் பார்ப்பீர்கள். நடைபாதை வியாபாரிகளுக்கு இது நல்ல நாள். உத்தியோகம் பார்ப்பவர்கள் முதலாளியின் பாராட்டைப் பெறுவார்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் எதிர்கால நலனில் அக்கறை காட்டுவீர்கள்.

மீனம்

திடீர் செலவால் நெருக்கடியைச் சந்திப்பீர்கள். திருமண வயதினருக்கு வரன் கூடிவரும். வசதிக்கேற்ப புதிய வீடு மாறுவீர்கள். மனக்குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். தொழில் போட்டிகளைத் துடைத்து ஒழிப்பீர்கள். நண்பர்கள் மூலம் புதிய ஆர்டர்களைப் பெறுவீர்கள். பக்குவமாகப் பேசி பழைய கடன்களை வசூல் செய்வீர்கள். பிரிந்தவர்கள் நெருங்கி வருவார்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *