வெளிநாட்டு மூதாட்டி நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த தொழிலதிபர் மார்க்கஸ் லாசரோ நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்
வெளிநாட்டு மூதாட்டி நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டதாக சென்னையை சேர்ந்த தொழிலதிபர் மார்க்கஸ் லாசரோ நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
சென்னையை சேர்ந்த தொழிலதிபர் மார்க்கஸ் லாசரோ என்பவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது:
நீலகிரி மாவட்டம் மாவனல்லா பகுதியில் வசித்து வரும் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பார்பரா எலிசபெத் வில்லிஸ் என்னும் மூதாட்டி போலி பத்திரங்கள் மூலம் தன்னுடைய நிலத்தை அபகரித்துள்ளார் என்றும்,
இந்த நில அபகரிப்பு மோசடிக்கு உடந்தையாக பார்பரா உடன் ஜான்,பிரதாப் வாடியார்,கிருஷ்ணன், அப்பாஸ்,நரசிம்மன், ராமன்,நஞ்சுண்டான் மற்றும் சண்முகம் ஆகியோர் கூட்டாக செயல்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேற்கூறிய வெளிநாட்டு மூதாட்டி அந்நியச் செலாவணி மோசடி மற்றும் மசினகுடி பகுதியில் பல்வேறு நில மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மார்க்கஸ் லாசரோ தெரிவித்துள்ளார்.
மேலும் கோடிக்கணக்கான பணத்தை ஏமாற்றியதாக தன் மீது பொய்யான புகார்கள் அளித்துள்ள வெளிநாட்டு மூதாட்டி பார்பரா எலிசபெத் வில்லிஸ் மீதும் அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும் தகுந்த சட்டநடவடிக்கை எடுக்கும்படி மார்க்கஸ் லாசரோ அம்மனுவில் தெரிவித்துள்ளார்