கோவை  குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அருகம்பாளையம் பகுதியில் கோவை கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பயனிகள் நிழற்குடை திறப்பு விழா

Loading

கோவை  குன்னத்தூர் ஊராட்சிக்குட்பட்ட அருகம்பாளையம் பகுதியில் கோவை கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பயனிகள் நிழற்குடை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. முதன்மை விருந்தினராக  ரோட்டரி மாவட்ட இயக்குனர் பி.குமரேசன் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக அன்னூர் ஊராட்சி ஒன்றியம் திமுக உதவி தலைவர் எ.சத்தியமூர்த்தி கலந்து கொண்டு பயணியர் நிழற்குடையை திறந்து வைத்தார்.

குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா தங்கராஜ், ரோட்டரி உதவி ஆளுநர் எஸ்.பி.ரங்கநாதன் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பிரதிநிதி ஜி.பாபுராஜ், மன்ற உறுப்பினர் யமுனா மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள் நட்டனர்.மேலும் கிராம நூலகங்களுக்கு புத்தகங்கள் வழங்கினர். கோவை கிழக்கு ரோட்டரி சங்கம் சார்பாக தலைவர் முனைவர் பெ.ரா. முத்துசாமி,செயலாளர் ரா.விஜய்கிருஷ்ணன், சங்கபணிகள் தலைவர் ஜெ.சஞ்சீவ்குமார், சமுதாயபணி தலைவர் பா.ரமேஷ்குமார் திட்டத்தலைவர் கி.தேவராஜன் வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *