இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டை கொண்டாடும் விதமாக 75வாரங்களாக இந்திய அரசு விடுதலை நாளை கொண்டாடி வருகிறது

Loading

இந்திய சுதந்திரத்தின் 75 வது ஆண்டை கொண்டாடும் விதமாக
75வாரங்களாக இந்திய அரசு விடுதலை நாளை கொண்டாடி வருகிறது. அதனுடைய ஒரு பகுதியாக மத்திய சுங்க வாரியம் சென்னை புறநகர் ஜிஎஸ்டி ஆணையரகம் சார்பில்  இன்று கல்லூரி மாணவர்கள் மற்றும் ஜிஎஸ்டி ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு பிரம்மாண்ட சைக்கிள் பேரணி நடைபெற்றது.
 இந்த விழிப்புணர்வு பேரணியை முதன்மை தலைமை ஆணையர் மண்டலிகா ஸ்ரீனிவாஸ். கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த விழிப்புணர்வு பேரணியானது சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது.செய்தியாளர்களை சந்தித்த மண்டலிகா ஸ்ரீனிவாஸ் கூறுகையில்.
1887 ல் இதே நாளில் மே 10ஆம் தேதி இந்தியர்கள் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக கொதித்து எழுந்தார்கள் அதில் ராணி லட்சுமிபாய், மங்கள்பாண்டே ,தந்தியா தோப்  போன்றவர்களுடைய நினைவை போற்றும் விதமாக இந்த மே மாதம் 10வது நாளில் இந்த ஆண்டும்  கொண்டாடப்படுகிறது. குறிப்பாக 75 வாரங்களாக இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
மேலும் தென்னிந்தியாவில்  பாண்டிச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரி வசூலில் சாதனை. புரிந்துள்ளது. 2021-2022 ஆம் ஆண்டிற்கான ஜிஎஸ்டி வருவாய் 40,000 கோடியை தாண்டி 41,090 கோடி ஜிஎஸ்டி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் கடந்த மார்ச் மாத நிலவரப்படி இந்த வருவாய் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏப்ரல் மாத நிலவரப்படி அதிக வருவாய் ஈட்டி உள்ளதாகவும் அதன் படி 4200 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் பெருமையாக தெரிவித்துள்ளார்.
நாட்டின் ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூல் என்பது முதன் முறையாக அதிகரித்துள்ளதாகவும்.ஜூலை 2017 பிறகு. 1.68 லட்சம் கோடியாகும் தமிழகத்தில் ஜி.எஸ்.டி மற்றும் சி.எஸ்.டி 10% வளர்ச்சியாகும். சமீபத்தில் கட்டாயமாக ஈ-இன்வாய்ஸ் வழங்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை ஜிஎஸ்டி புறநகர் ஆணையரக  முதன்மை  ஆணையர் ரவிசெல்வன் திரு பார்த்திபன், முதன்மை ஆணையர், சென்னை GST வடக்கு ஆணையரகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்
0Shares

Leave a Reply