தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்

Loading

தஞ்சாவூர், ஏப்.30-
தஞ்சாவூர்  அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில்  கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.
விளையாட்டு மைதானத்தில் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி அதனை மேயர் சண்.ராமநாதன் தொடக்கி வைத்தார். தஞ்சை மாநகராட்சியில்
உள்ள 51 வார்டுகளிலும் பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பு, நகர்புற பகுதிகளில் குற்றசெயல்களை தடுக்கும் வகையிலும் கண்காணிக்கும் விதமாகவும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
அனைத்து கேமராக்களும் 5 எம்.பி. திறன் கொண்டவை. காவல்துறை, பேரிடர் மேலாண்மை துறை, போக்குவரத்து, தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளுடன் இணைந்து செயல்படுத்தபட உள்ளது.
மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தஞ்சை மாநகராட்சியில் முதல் கட்டமாக 1400 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதன் மதிப்பு ரூபாய் 3 கோடி ஆகும். தேவைப்பட்டால் கேமராக்கள் இன்னும் அதிகப்படுத்தப்படும். சத்யா ஸ்டேடியத்தில் மட்டும் 8  கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இன்னும் மூன்று மாத காலத்திற்குள் இந்த பணிகள் முழுமை பெறும். இதன் கண்ட்ரோல் ரூம் மாநகராட்சி அலுவலகத்தில் செயல்படும். தமிழகத்திலேயே முன்மாதிரியான மாநகராட்சியாக தஞ்சை திகலும். என தெரிவித்தார்.

0Shares

Leave a Reply