இன்றைய ராசி பலன்கள்

Loading

மேஷம்

திட்டமிட்டு செயல்பட்டு காரியங்களை செய்வீர்கள். எதிர்பார்த்ததை விட இருமடங்கு லாபம் கிடைக்கும். ஊழியர்கள் உற்சாகமாக வேலை செய்வார்கள். நிலம் விற்ற பணம் கைக்கு வரும். வெளிவட்டார உதவிகள் தாராளமாகக் கிடைக்கும். நீண்டநாள் பகை நீங்கி உறவு மேம்படும். வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக அமையும். விவசாய விளைபொருட்கள் நன்கு விற்பனையாகும்.

ரிஷபம்

தொழிலுக்கான புதிய முயற்சிகளில் இறங்குவீர்கள்.சிக்கலான வேலைகளை சுலபமாக முடிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். திருமணப் பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும். உறவினர்களின் உதவி உத்வேகம் கொடுக்கும். உயரதிகாரிகள் ஊக்கம் கொடுப்பார்கள். பணவரவு மகிழ்ச்சியை உண்டாக்கும்.

மிதுனம்

ஆன்லைனில் பணம் அனுப்பும்போது எண்கள் சரிதானா என்பதை இருமுறை பார்த்துக்கொள்ளுங்கள்.கடினமாக உழைத்தாலும் மேலதிகாரிகள் கண்டுகொள்ள மாட்டார்கள்.பைக்கில் வெளியே கிளம்பும்போது பெட்ரோல் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். கண்ட இடத்தில் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். நம்பியவர்கள் கை விரிப்பார்கள்.

கடகம்

தொழில் அப்படியே நடக்கட்டும். புது முயற்சிகள் பாதகமாக அமையும். எதிர்பார்த்த லாபம் கிடைக்காமல் வியாபாரிகள் விசனம் அடைவார்கள். வெளியூர் பயணங்களை ஒத்திப் போடுவது நல்லது. பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருங்கள். கெட்ட பெயர் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வீட்டில் விவாதங்களில் இறங்காதீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும்.

சிம்மம்

மனைவி மக்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வார்கள். வேலை திறமையால் உற்பத்தி பெருகும் போட்டி பந்தயங்கள் சாதகமாக அமையும். பிதுர் சொத்துக்கள் வந்து சேரும். ஷேர் மார்க்கெட் உங்களுக்கு கை கொடுக்கும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

கன்னி

நல்ல பிள்ளையாக நீங்கள் நடந்து கொண்டாலும் தொல்லைகள் வந்து துயரப்படுத்தும். இருப்பினும் பொருளாதார துறையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஊழியர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். வியாபாரிகள் ஏற்றமான பலன்களை அடைவார்கள். எதிரிகள் இடையூறு செய்ய நினைப்பார்கள். புத்திசாலித்தனத்தால் அவற்றை முறியடிப்பீர்கள்.

துலாம்

என்னடா வாழ்க்கை என்று மனச்சோர்வு அடைவீர்கள். நன்றி மறந்த மனிதர்கள் மீது கோபப்படுவீர்கள். வீட்டில் நகைச்சுவையாக பேசுவதை நிறுத்துங்கள். அது குதர்க்கத்தில் கொண்டுபோய்விடும். திட்டமிட்டு காரியம் செய்யுங்கள். நஷ்டம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரம் ஏற்றம் இறக்கமாக இருக்கும். பணப்பற்றாக்குறையால் வேலைகள் தாமதப்படும்.

விருச்சிகம்

செல்லும் இடமெல்லாம் சிறப்பு பெறுவீர்கள். ஷேர் மார்க்கெட் தொழில் சாதகமாக அமையும். புதிய முதலீடுகள் லாபத்தைத் தரும். வியாபாரம் அதிகரித்து மகிழ்ச்சியை உண்டாக்கும். கடினமான வேலைகளை சுலபமாக முடிப்பீர்கள். புதிய வாகனப் பிராப்தி உண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிப் போடுவீர்கள்.பிள்ளைகள் உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு நடப்பார்கள்.

தனுசு

குடும்பத்துடன் குதூகலமாக வெளியூர் பயணம் செய்வீர்கள். புதிய ஆடை அணிமணிகளை வாங்கி குஷிப் படுத்துவீர்கள். உங்களிடம் போட்டி போட நினைப்பவர்கள் தோற்றுப் போவார்கள். உங்களின் முன்னேற்றம் உறவினர்களை பொறாமைப்பட வைக்கும். நயவஞ்சக நட்புகள் உங்களை விட்டு விலகும். சகோதர சகோதரிகள் உறவு சாதகமாக இருக்கும். போட்டி பந்தயங்களில் லாபம் பெறுவீர்கள்.

மகரம்

உங்களின் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள ஆடம்பரமாக செலவு செய்வீர்கள். பணத் தேவைக்காக கடன் வாங்க தயங்க மாட்டீர்கள். சம்பள உயர்வு கிடைத்து சந்தோஷப்படுவீர்கள். வேலை தேடி அலைபவர்களுக்கு நல்ல இடம் அமையும்.கையில் இருக்கும் பணத்தை நிலத்தில் முதலீடு செய்வீர்கள். கிடைக்கும் லாபத்தில் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். பந்தயங்களில் வெற்றி பெறுவீர்கள்.

கும்பம்

மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் போது கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள். கண்களில் கோளாறு ஏற்பட வாய்ப்புண்டு. தானுண்டு தன் வேலையுண்டு என்று இருங்கள். அதிகப் பிரசங்கித்தனமாக எதிலும் தலையிடாதீர்கள். வாகனங்கள் பழுதாகி சிரமத்தை கொடுக்கும். வெளியூர் பயணங்கள் அவ்வளவு சாதகமாக அமையாது. குறுக்கு வழியில் செல்ல முயன்றால் சறுக்கல் தான் ஏற்படும்.

மீனம்

ஏடிஎம் மிஷினில் பணம் எடுத்தாலும் எண்ணிப்பாருங்கள். நகைகளை கண்ட இடத்தில் கழற்றி வைக்காதீர்கள்.சின்ன பயல்களின் சவகாசத்தை ஒதுக்கி வையுங்கள். கணக்குகளை மறக்காமல் எழுதி வையுங்கள். வீட்டை விட்டு வெளியேறும் போது பூட்டை சரி பாருங்கள்.மனதில் தோன்றுவதை பேசி மனத்தாங்கல் அடையாதீர்கள். மற்றவர்கள் குறிப்பறிந்து நடந்து கொள்ளுங்கள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *