ஸ்டாலினுடன் சைக்கிளிங் செல்ல ஆசைப்பட்ட ராகுல் காந்தி,முதலமைச்சர் ஸ்டாலினுடன் சைக்கிளிங் செல்ல ராகுல்காந்தி விருப்பப்பட்ட தாக சட்டப்பேரவையில் காங்கிரஸ் சட்டமன்ற கட்சித் தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்

Loading

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரம் 110வது விதியின் கீழ்
 சென்னைக்கு அருகே பிரமாண்டமான விளையாட்டு நகரம் அமைக்கப்படும் என்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு தலா மூன்று கோடி மதிப்பீட்டில் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என்றும் வடசென்னையில் குத்துச்சண்டை வளாகம் வளாகம் ஒன்று அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார் முதலமைச்சரின் இந்த அறிவிப்புக்கு அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்தனர் தமிழ்நாடு மனிதநேய மக்கள் கட்சியின் உறுப்பினர் ஜவாஹிருல்லா யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்ற அடிப்படையில் முதலமைச்சர் இந்த சலுகைகளை அறிவித்து இருக்கிறார் இந்த 70 வயதிலும் உடல்ரீதியாகவும் உளரீதியாகவும் பலமானவர் முதலமைச்சர் ,இப்பொழுதும் வெளிநாடுகளுக்கு சென்றாலும் சைக்கிளிங் செல்லக் கூடிய ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான் என்றார்

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் செல்வபெருந்தகை பேசுகையில் ராகுல்காந்தி சென்னை வந்தபோது முதலமைச்சர் சனிக்கிழமை தோறும் சைக்கிளிங் செல்வார் என்று தெரிவித்தேன் உடனே அவர் முதலமைச்சரோடு அடுத்த முறை வரும்போது சைக்கிளில் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்ததாக கூறினார் பாஜக உறுப்பினர் நயினார் நாகேந்திரன் நலந்தானா உடலும் உள்ளமும் நலம் தானா என்று பாடல் ஒன்றுஉண்டு தன்னுடைய உடலும் உள்ளமும் வலிமையாக இருந்தால் போதாது தமிழகம் முழுவதும் மக்கள் வலிமையாக இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின்கருதுவதாக பாராட்டினர்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் நாகை மாலி பேசுகையில் முதலமைச்சரை நவீன மார்க்கண்டேயன் என்று புகழ்ந்தார் ஜிகே மணி பேசுகையில் என்னுடைய மனதில் இருந்த இந்த எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக பேரவையில் அடிக்கடி கைகளை தூக்கி என்னுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்காக காத்திருந்தேன் அவைத்தலைவர் அதற்கு அனுமதிக்கவில்லை.என்னுடைய மனதில்தோன்றியதை யாரும் கோரிக்கை வைக்காமலேயே முதலமைச்சர் நிறைவேற்றி விட்டார் என்று என்று பேசினார் அதற்கு பதிலே பதிலளித்த சபாநாயகர் அப்பாவு,முதலமைச்சர் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என்று தெரிந்து தான் உங்களுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை என்று சொன்னதும் அவை  சிரிப்பொலியில்ஆழ்ந்தது

0Shares

Leave a Reply