தஞ்சையில் பீம் அறக்கட்டளை மற்றும் தஞ்சை உறவின்முறை சங்கம் சார்பில் அம்பேத்கர் பிறந்தநாள் – விருது வழங்கும் விழா
தஞ்சாவூர், மார்ச்.19:
தஞ்சையில் பீம் அறக்கட்டளை மற்றும் தஞ்சை உறவின்முறை சங்கம் சார்பில் பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் மற்றும் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவிற்கு உறவின்முறை சங்க தலைவர் கஜேந்திரன் தலைமை வகித்தார். ராஜாங்கம், தங்கராசு, சண்முகம், கண்ணதாசன், அர்ஜுன் ராஜ், காசி. ரவிச்சந்திரன், அசோக்குமார், சந்திரமோகன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி. திருவள்ளுவன் கலந்து கொண்டு விருது வழங்கி பேசினார். செயலாளர் ரெங்கராஜன் வரவேற்றார்.
அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் தங்கராசுக்கு அம்பேத்கர் விருதும், அரசு ஊழியர் ஐக்கிய பேரவை அரசாங்கம் என்பவருக்கு பெரியார் விருதும், குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி தமிழ்த்துறை துறைத்தலைவர் திராவிட ராணிக்கு அன்னை மீனாம்பாள் விருதும், ஆதித்தமிழர் பாதுகாப்பு பேரவை தவ.கணேசனுக்கு அயோத்திதாச பண்டிதர் விருதும், செல்லப்பெருமானுக்கு இரட்டைமலை சீனிவாசன் விருதும் வழங்கப்பட்டது.
ஆதிதிராவிடர் கூட்டமைப்பு செயல் தலைவர் மு.க.இணை வேந்தன், ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. கண்ணையன், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் சுமதி கண்ணதாசன், பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் உதயகுமார், அருந்தவபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா ஆசைத்தம்பி, எழுத்தாளர் சீவகன், ஐ.ஓ.பி. மண்டல மேலாளர் கோடீஸ்வர ராவ், பம்செப் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் நாக்பூர் விக்கி சவுத்ரி, பாபநாசம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி துணை ஆணையர் முரளிதரன் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.