நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி உறுதி மணவிழா வாழ்த்துரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Loading

சென்னை,தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யில் தி.மு.க. துணை அமைப்புச் செய லாளர் அன்பகம் கலை – தமிழ்ச்செல்வி ஆகியோரது மகன் கலை கதிரவன் – _ சந்தியா பிரசாத் இணையரின் திரு மணம் அண்ணா அறிவாலயம் கலை ஞர் அரங்கத்தில்  (20.2.2022) அன்று  நடைபெற்றது.

மணவிழாவை நடத்தி வைத்து தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய வாழ்த்துரையில் குறிப்பிட்டதாவது:

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களினுடைய தேர்தல் (பிப்.19) நடை பெற்றிருக்கிறது. நான் ஓராண்டுகாலம் மிசா சட்டத்தின்கீழ் கைது செய்யப் பட்டு, சென்னை சிறைச்சாலையில் அடைபட்டிருந்து, அந்தச் சிறைவா சத்தை அனுபவித்து முடித்து விட்டு விடுதலையாகி வெளியில் வருகிறேன்.  நான் விடுதலையாகி வெளியில் வருகிற போதுதான், முதன்முதலில் அன்பகம் கலை-யை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.

சிறைச்சாலையிலிருந்து கோபால புரத்திற்கு வருகிறவரையில், அவர் தொடர்ந்து என்னை பின்பற்றி வந்து, கலைஞருடைய இல்லத்தில் வந்து, கலைஞரைப் பார்க்கின்ற நேரத்தில் உணர்ச்சியோடு முழங்கிய அந்த முழக் கத்தை இன்றைக்கும் நான் நினைத்துப் பார்க்கிறேன்.  அன்றிலிருந்து இன்று வரையில், எந்த நேரத்திலும் – எந்தச் சூழ்நிலையிலும் – எப்படிப்பட்ட நிலை யிலும், நான் பதவியில் இருந்தாலும் – இல்லாவிட்டாலும், நான் பொறுப்பில் இருந்தாலும் – இல்லாவிட்டாலும், என் னோடு இருந்திருக்கிறார்.

நடந்து முடிந்திருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் வரவிருக்கிறது. அது என்ன முடிவு என்பது எல்லோருக்கும் தெரிந்த கதைதான். மிகப்பெரிய வெற்றியை பெறப்போகிறோம். அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

தேர்தல் நேரத்தில் காணொலிக் காட்சியில் நான் பேசி முடித்துவிட்டேன். மக்களைச் சந்திக்க வருவதற்கு தைரியம் இல்லை என்று என்னைப்பற்றி சிலர் பேசினார்கள். என்னைப் பார்த்து, மக்களைப் பார்க்க தைரியம் இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்.

எதற்காக நான் காணொலிக் காட் சியின் மூலமாக அந்தப் பிரச்சாரத்தை நடத்தினேன் என்று கேட்டால், கரோனா காலமாக இருக்கின்ற கார ணத்தால், அந்தத் தொற்றுக்காக அரசு சில விதிமுறைகளை அறிவித்திருக்கின்ற காரணத்தால்தான், நான் நேரடியாகச் செல்லவில்லை.

அதே நேரத்தில் நான் பேசிய அனைத்துக் கூட்டங்களிலும் சொன் னேன், தேர்தல் முடிந்து அதனுடைய வெற்றி விழா நடக்கின்ற போது, நிச் சயமாக உறுதியாக அனைத்து மாவட் டங்களுக்கும் நானே நேரடியாக வருவேன் என்று சொல்லி இருக்கிறேன்.

ஏன் வரவில்லை என்று கேட்டவர் களுக்கு நான் சொல்லிக் கொள்வது, “மழைக்காலத்தில் நான் வெள்ளப் பகுதிகளுக்கு சென்றபோது, ஏனப்பா இப்போது வருகிறாய், உடம்பை ஏனப்பா கெடுத்துக் கொள்கிறாய்” என்று அக்கறையோடு கேட்கும் நிலையில்தான் இன்றைக்கு மக்கள் இருந்து கொண்டிருக்கிறார்கள்.  மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் வாழ்க்கை யில் எல்லா வளமும் பெற்று வாழ வேண்டும்.

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதி தாசன் சொன்னதுபோல, “வீட்டிற்கு விளக்காய் நாட்டிற்கு தொண்டர் களாய்” இருந்து வாழுங்கள்… வாழுங்கள்… வாழுங்கள்… என்று வாழ்த்தி விடை பெறுகிறேன். இவ்வாறு வாழ்த்துரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப் பிட்டார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *