மாடியிலிருந்து தூக்கி வீசபட்ட பெண் 4 ஆண்களால் பாலியல் பலாத்காரம்

Loading

டெல்லியை சேர்ந்த 25 வயதுள்ள இளம்பெண் ஒருவர் வேலைக்காக ராஜஸ்தான் சென்றுள்ளார். அப்போது அப்பெண்ணிற்கு வேலை வாங்கித்தரவதாக கூறி 4 இளைஞர்கள் ராஜஸ்தானிலுள்ள சுரு என்ற நகருக்கு வரவழைத்துள்ளனர்.

அவர்களை நம்பி சென்ற அப்பெண்ணை ஏமாற்றிய அவர்கள் கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், இரக்கமற்ற அந்த கும்பல் அப்பெண்ணின் கை, கால்களை கட்டி மாடியிலிருந்து தூக்கி வீசியுள்ளனர். அதிஷ்டவசமாக பெண்ணை கட்டிய கயிறு கம்பத்தில் சிக்கியதால், அவர் உயிர்தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அப்பெண்ணை சிகிச்சைக்காக மருத்துவமணைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் 4 இளைஞர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *