மத தாக்குதலை கண்டித்து சமூக நீதிக்கான கூட்டமைப்பின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்
![]()
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் நடந்த மத தாக்குதலை கண்டித்து சமூக நீதிக்கான கூட்டமைப்பின் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் மக்கள் தேசம் கட்சி குரு விஜயன் தலைமையில் நடந்தது.இதில் உலக தமிழர் பாசறை உழவன் மாரிச்சாமி, மக்கள் தேசம் கட்சி சேவியர் இருதயராஜ் முன்னிலை வகித்தனர்.மேலும் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், மக்கள் தேசம் கட்சி ர.வேதமணி, SPDI சிக்கந்தர், அப்துல் கபூர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

