கன்னியாகுமரி மாவட்டம் :- தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது
கன்னியாகுமரி மாவட்டம் :- தமிழகம் முழுவதும் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் மாநகராட்சி 52 வார்டுகள் மற்றும் குளச்சல் குழித்துறை, பத்மநாபபுரம், கொல்லங்கோடு ஆகிய நான்கு நகராட்சிகள் மற்றும் அஞ்சுகிராமம் அகஸ்தீஸ்வரம் கொட்டாரம் உள்ளிட்ட 51 பேரூராட்சி களுக்கான வேட்புமனுத்தாக்கல் அந்தந்த அலுவலகங்களில் நேற்று காலை தொடங்கியது. நாகர்கோவில் மாநகராட்சிக்கான வேட்புமனு தாக்கல் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று தொடங்கியதை தொடந்து அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் நாள் என்பதால் சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வந்து மனுக்களை பெற்று சென்றனர்…