காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 3800 கீ மீ 70 நாளில் ஓய்வின்றி கடந்த 61 வயது ராணுவ வீரர்….. பேங்க் ஆஃப் பரோடா சார்பில் பாராட்டு
கன்னியாகுமரி மாவட்டம் இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மும்பையைச் சேர்ந்த 61 வயதான குமார் அஜ்வானி என்பவர் இந்திய ராணுவத்தில் ஓய்வு பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் ராணுவ வீரர்களின் மறுவாழ்வுக்கும் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தின் மலைவாழ் மக்களின் பள்ளிக்கூடங்களை மேம்பாடு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை சாலை மார்க்கமாக ஓடி வர திட்டமிட்டார். அதன் படி அவர் நேற்று கன்னியாகுமரி வந்து தன்னுடைய சாதனையை நிறைவு செய்தார். உலக சாதனை முயற்சியாக நடைபெற்ற இந்த கோரிக்கை விழிப்புணர்வில் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை 3800 கிலோ மீட்டர் தூரத்தை 70 நாட்களாக இடைவிடாமல் ஓடி நேற்று கன்னியாகுமரி வந்து சேர்ந்தார். உலக சாதனையாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த சாதனை முயற்சி மேற்கொண்ட அவருக்கு இவரின் உன்னத நோக்கத்தை ஆதரித்து பேங்க் ஆஃப் பரோடா சார்பில் கன்னியாகுமரியில் நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய பாங்க் ஆஃப் பரோடா சென்னை மண்டலத்தின் நெட்வெர்க்கிங் துணை பொது மேலாளர் கே.வி. சலபதி நாயுடு கூறும்போது, ஸ்ரீ குமார் அஜ்வானி மற்றும் அவரது குழுவினரின் முயற்சிகளை நாங்கள் பாராட்டுகிறோம் , மேலும் இந்த ஓட்டத்தில் இணைந்திருப்பதில் பெருமை கொள்கிறோம் . நமது தேசத்தின் மீட்பாளர்களுக்கு சேவை செய்வது நமது வங்கியின் குறிக்கோள் என்றார்.
மேஜர் ஜெனரல் VDI தேவாரம் (ஒய்வு) மற்றும் மதுரை மண்டல துணை மண்டல மேலாளர் கே.ஜே. சந்தோஷ் முன்னிலையில் பாராட்டு விழா நடைபெற்றது.