பேட்ரிக் பள்ளியில் தடுப்பூசி முகாமை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடங்கி வைத்தார்
புதுச்சேரி தந்தை பெரியார் நகரில் உள்ள புனித பேட்ரிக் பள்ளியில் 15 வயது முதல் 18 வயது நிரம்பிய மாணவ மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாமை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் மற்றும் சுகாதார துறை செயலாளர் C. உதயகுமார் , சுகாதார துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு, சமூக நலத்துறை இணை இயக்குனர் முரளி , நோய் தடுப்புத்துறை இணை இயக்குனர் ராஜாம்பாள் ரெட்டியார் பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவ அதிகாரி M.குணசேகரன்,தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். பி, ரமேஷ் துவக்கி வைத்து மாணவர்களுக்கு நோய் குறித்து விழிப்புணர்வு வழங்கினார்கள். முகாமில் 10 .11. 12 . வகுப்பில் பயிலும் சுமார் 700.க்கும் மேற்பட்ட மாணவியர்கள் கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் ரெஜிஸ் பிரடெரிக், பள்ளியின் மருத்துவ ஆலோசகர் ஜீட்டா பிரடெரிக், மற்றும் முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா ஆகியோர் கலந்து கொண்டனர்.