எலி மருந்து சாப்பிட்ட வாலிபர் உயிரிழப்பு

Loading

எலி மருந்து சாப்பிட்ட வாலிபர் உயிரிழப்பு
பாலக்கோடு.ஜன.9-

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த ஜோகிர்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ராசு மகன் சதீஷ்குமார் 25 வயது இவர் பிளஸ் டூ முடித்துவிட்டு டிரைவர் வேலை செய்து வருகிறார். ஐந்தாம் தேதி இரவு போனில் அதிக நேரம் பேசியுள்ளார்.
அவருடைய தந்தை போனில் மணிக்கணக்கில் யாரிடம் பேசுகிற என்று கண்டித்துள்ளார். இதனால் இரவு வீட்டில் எலி மருந்து சாப்பிட்டு மயங்கி விழுந்த சதீஷ்குமார் பெற்றோர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
தீவிர சிகிச்சையில் இருந்த சதீஷ்குமார் இன்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து மகேந்திராமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

0Shares

Leave a Reply