Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 31, 2021
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் ஞாயிற்றுக்கிழமை அக்டோபர் 31, 2021
சென்னை: பிலவ வருடம் ஐப்பசி 14 ஆம் தேதி அக்டோபர் 31,2021 ஞாயிறுக்கிழமை, தசமி திதி பகல் 02.27 மணி வரை அதன் பின் ஏகாதசி திதி, மகம் நட்சத்திரம் பகல் 01.16 மணிவரை அதன் பின் பூரம் நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். மகர ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு ஆனந்தமான செய்தி வந்து சேரும். திருமண சுபமுயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும்.குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் சுமூகமாக முடியும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். நிதி நெருக்கடிகள் நீங்கும் கடன் பிரச்சினை தீரும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்ச்சியை தரும்.
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பயணங்களால் நன்உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் தொழிலில் முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.
மிதுனம்
சந்திரன் இன்றைய தினம் மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். புத்திர வழியில் அனுகூலம் உண்டாகும். வழக்கு ரீதியாக வெற்றி கிட்டும். வியாபாரத்தில் கூட்டாளிகளோடு ஒற்றுமையாக செயல்படுவதன் மூலம் லாபம் அடையலாம். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். மன நிம்மதி ஏற்படும்.
கடகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். பெரிய மனிதர்களின் நட்பு மனதிற்கு தெம்பை கொடுக்கும். நண்பர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
சிம்மம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்குள் பயணம் செய்கிறார். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபம் மறையும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கொடுத்த கடன் தடையின்றி கிடைக்கும். இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
கன்னி
சந்திரன் இன்று விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். சுபகாரியங்கள் கைகூடும். இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் சுப செலவுகள் அதிகரிக்கும்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் இன்று வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். வருமானம் பெருகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். விருச்சிகம்
சந்திரன்
இன்று பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக மகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு தேடி வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த உதவிகள் எளிதில் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொருளாதார நெருக்கடிகள் நீங்கும்.
தனுசு
சந்திரன் இன்றைய தினம் ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் பிள்ளைகளால் மனசங்கடங்கள் ஏற்படலாம். வேலையில் சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதமாகும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும்.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் வரும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. வியாபாரத்தில் கவனமுடன் செயல்படுவதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பயணங்களை தவிர்ப்பது நல்லது. செய்யும் செயல்களில் தாமத நிலை உண்டாகும்.
கும்பம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் ரீதியாக பொருளாதார நிலை உயரும். உடல் ஆரோக்கியம் சீராகும்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உற்றார் உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி மனநிம்மதி உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் வீடு தேடி வரும். சேமிப்பு உயரும். ஆன்மீக பயணம் செல்வதற்கான வாய்ப்பு தேடி வரும்.