அழகப்பா பல்கலைக்கழக நிறுமச் செயலரியல் வகுப்புகள் துவக்கம்.
காரைக்குடி அக்டோபர் 31
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நிறுமச் செயலரியல் துறையின்
36 வது பேட்ச் எம்.பி.ஏ மாணவர் சேர்க்கைக்கான வகுப்புகள் துவக்கம் மற்றும் புத்தாக்க பயிற்சி தொடக்க விழா நேற்று அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைக்கழக நிறுமச் செயலரியல் துறைத் தலைவர் பேரா. வேதிராஜன் அனைவரையும் வரவேற்றார்.
இவ்விழாவிற்கு தலைமையேற்று பேசிய துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர் முனைவர் சுவாமிநாதன்,
செயலால் அறிவைப் பெறுதல் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், வேலைவாய்ப்புக்கு தங்களை மாணவர்கள் எவ்வாறு தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் விரிவாகப் பேசினார்.
புத்தாக்க பயிற்சியை தொடங்கிவைத்தபின்
பேசிய மற்றொரு உறுப்பினர் பேரா.கருப்புச்சாமி,
மாணவர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படை
மனித நற்பண்புகள் குறித்தும், கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், மாணவர்களுக்கு சேவை பற்றியும் அறிவுறுத்தினார்.
பின்னர் பேசிய சென்னை பயிற்சி நிறுவன செயலர் வாசுதேவன்,
மாணவர்களுக்கு நேர மேலாண்மை, ஆற்றல் மேலாண்மை மற்றும் உடல்நலம் பேணுதல் குறித்து விரிவாகப் பேசினார்.
வழக்குரைஞர் மற்றும் பயிற்சி நிறுவனர் ஜெயகுமார், தனிநபரின் ஆளுமை வளர்ச்சிக்கு திருக்குறள் எவ்வளவு சிறந்த வழிகாட்டியாக உள்ளது என்று பெருமிதத்தோடு பேசினார்.
நிறைவாக நிறுமச் செயலரியல் துறை பேரா. மதிராஜ் நன்றி கூறினார்.