Today’s Rasi Palan :இன்றைய ராசி பலன் சனிக்கிழமை அக்டோபர் 23, 2021

Loading

Today’s Rasi Palan :இன்றைய ராசி பலன் சனிக்கிழமை அக்டோபர் 23, 2021

சென்னை: பிலவ வருடம் ஐப்பசி 6 ஆம் தேதி அக்டோபர் 23,2021 சனிக்கிழமை. திருதியைத் திதி இரவு 03.02 மணி வரை அதன் பின் சதுர்த்தி திதி. கிருத்திகை இரவு 09.53 மணிவரை அதன் பின் ரோகிணி நட்சத்திரம். சந்திரன் இன்றைய தினம் ரிஷப ராசியில் பயணம் செய்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

மேஷம்
குடும்ப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சந்திரனால் சந்தோஷம் அதிகரிக்கும். இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுக படுத்தி லாபம் பெறுவீர்கள். புதிய பொருள் வீடு வந்து சேரும். திருமண பேச்சுவார்த்தைகள் தொடங்க அனுகூலமான நாளாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.

ரிஷபம்
சந்திரன் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். திடீர் தனவரவு உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும். வியாபாரத்தில் கூட்டாளிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுபசெலவுகள் ஏற்படும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். ஆலய வழிபாடு மன அமைதியைத் தரும்.

மிதுனம்
சந்திரன் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். குடும்பத்தினரிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். சிந்தித்து செயல்பட்டால் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். நண்பர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படலாம் பேச்சில் கவனம் தேவை.

கடகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எந்த செயலிலும் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். சுறுசுறுப்பு அதிகரிக்கும். வியாபார வளர்ச்சிக்காக எதிர்பார்த்திருந்த உதவிகள் எளிதில் கிடைக்கும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கடன் பிரச்சினைகள் தீரும். மன மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வியாபாரம் சிறப்பாக நடைபெறும். பிள்ளைகளுடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களின் அன்பை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்கள் விற்பனையால் லாபம் வரும். அப்பா வழி உறவினர்கள் மூலம் நல்ல செய்தி தேடி வரும்.

கன்னி
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இன்று உறவினர்களால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்தி தேடி வரும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும். வீண் செலவுகளை குறைப்பதன் மூலம் பணப் பிரச்சினையை தவிர்க்கலாம்.

துலாம்
சந்திரன் உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களில் கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்
சந்திரன் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உறவினர்கள் மூலம் சுப செலவுகள் வரும். பணப்பிரச்சினைகள் குறையும் நிதி நெருக்கடிகள் நீங்கும். வியாபாரத்தில் இருந்த போட்டிகள் எதிர்ப்புகள் குறைந்து வருமானம் பெருகும். பெண்களுக்கு தேவைகள் யாவும் பூர்த்தியாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். உச்சம் பெற்ற சந்திரனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

தனுசு
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிட்டும். வியாபாரத்தில் கூட்டளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். இன்று பணவரவு அமோகமாக இருக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டாகும். நினைத்த காரியம் நிறைவேறும். காரிய வெற்றி ஏற்படும்.

மகரம்
சந்திரன் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று வீட்டில் பிள்ளைகளால் சுப காரியங்களில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியைத் தரும். வெளியூர் பயணங்களால் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் வீடு தேடி வரும்.

கும்பம்
சந்திரன் இன்று சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சுபகாரியங்கள் கைகூடும். நண்பர்களின் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறையும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சுப செலவுகள் வரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.

மீனம்
சந்திரன் இன்று மூன்றாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளால் அனுகூலங்கள் உண்டாகும். இன்று குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண சுபகாரிய பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடியும். புதிய வண்டி வாகனம் வாங்கலாம்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *