Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 21, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 21, 2021

சென்னை: பிலவ வருடம் புரட்டாசி 5 ஆம் தேதி செப்டம்பர் 21,2021 செவ்வாய்க்கிழமை. பிரதமைத் திதி மறுநாள் விடிகாலை 05.52 மணிவரை அதன் பின் துவிதியை. உத்திரட்டாதி மறுநாள் விடிகாலை 05.06மணி வரை அதன் பின் ரேவதி.சந்திரன் இன்றைய தினம் மீன ராசியில் பயணம் செய்கிறார் ரிஷப ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனம் தேவை. மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். திடீர் பண வரவும் அதற்கேற்ப செலவும் வரும். இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். புரமோசன் பற்றிய நல்ல தகவல் வரும். செய்யும் தொழிலில் லாபம் வரும். பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் இருந்த பிரச்சினைகள் தீரும்.

மிதுனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். நிதி நெருக்கடிகள் நீங்கும்.

கடகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். பணவரவு நன்றாக இருக்கும் செலவுளும் அதிகரிக்கும். விரைய செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிம்மம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உடல் ஆரோக்கியத்தில் மந்த நிலை ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது. இன்று நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.

கன்னி
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் ஏற்படும். இன்று வீட்டில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் பெருகும். வங்கி சேமிப்பு உயரும்.

துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்கலாம். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழிலில் பணியாட்களின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபங்களை அடைவீர்கள். உறவினர்கள் வழியிலும் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்கள் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். பயணங்களால் நன்மைகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கிய ரீதியாக மருத்துவ செலவுகள் ஏற்படலாம் கவனம் தேவை.

தனுசு

சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத திடீர் விரயங்கள் ஏற்படலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் அதிகரிக்கும். பெண்கள் வீட்டிற்கு புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். கடன் பிரச்சினைகள் தீரும். பண வருமானம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.

கும்பம்
சந்திரன் இன்று உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புரமோசன் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும்.

மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். சுபகாரியங்கள் கைகூடி வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும் நாள். பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *