Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் திங்கட்க்கிழமை செப்டம்பர் 13, 2021

Loading

Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் திங்கட்க்கிழமை செப்டம்பர் 13, 2021

சென்னை: பிலவ வருடம் ஆவணி 28 ஆம் தேதி செப்டம்பர் 13,2021 திங்கட்கிழமை. சப்தமி பகல் 03.11மணிவரை அதன் பின் அஷ்டமி திதி. அனுசம் காலை 08.23 மணி வரை அதன் பின் கேட்டை. சந்திரன் இன்றைய தினம் விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். மேஷ ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. சந்திரன் ஆதிக்கம் நிறைந்த திங்கட்க்கிழமையான இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்

மேஷம்
சந்திரன் இன்றைய தினம் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் செய்யும் வேலைகளில் தடங்கல்கள் ஏற்படும். வீண் பேச்சுக்களை தவிர்க்கவும். பண விவகாரங்களில் கவனமாக இருக்க வேண்டும். பணம், பொருளை பத்திரப்படுத்தவும். வியாபார ரீதியான பணம் கொடுக்கல் வாங்கலில் சற்று நிதானமாக செயல்படுவது நல்லது. மற்றவர்களை நம்பி புதிய முயற்சிகளில் இறங்க வேண்டாம். பனங்கற்கண்டு சாப்பிட்டு விட்டு பயணம் செய்யவும். அதிர்ஷ்டமான எண் 7, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

ரிஷபம்
சந்திரன் ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சந்திரனின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு கூட்டாளிகளால் நன்மை ஏற்படும். இன்று நீங்கள் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். அதிர்ஷ்டமான எண் 6, அதிர்ஷ்ட நிறம் இளம் மஞ்சள்.

மிதுனம்
சந்திரன் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். திருமண பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலன் கிடைக்கும். பெண்கள் வீட்டிற்குத் தேவையான தங்க நகைகள் ஆடை அபரணங்கள் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீண்ட நாட்களாக வராத கடன்கள் இன்று வசூலாகும். பண வரவு அதிகரிக்கும். அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்ட நிறம் பச்சை

கடகம்
சந்திரன் இன்றைய தினம் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பிள்ளைகளால் மகிழ்ச்சி அதிகரிக்கும். வேலை செய்யும் இடங்களில் சக தொழிலாளர்களிடம் விட்டு கொடுத்து செல்வது நல்லது. சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டமான எண் 2, அதிர்ஷ்ட நிறம் இளம் பச்சை.

சிம்மம்
சந்திரன் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் வரலாம் கவனம் தேவை. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பணம் வரும் வரைக்கும் பணத்தை சிக்கனமாக செலவு செய்தால் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கலாம். அதிர்ஷ்டமான எண் 1, அதிர்ஷ்ட நிறம் சிவப்பு.

கன்னி
சந்திரன் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் புரமோசனும் ஊதிய உயர்வும் கிடைக்கும். திடீர் பணவரவு வரும். வீட்டில் கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ராசியில் உச்சம் பெற்ற புதனுடன் இணைந்திருப்பதால் மனதில் உற்சாகம் பிறக்கும். தெளிவான மனநிலையில் இருப்பீர்கள். அதிர்ஷ்டமான எண் 3, அதிர்ஷ்ட நிறம் இளம்பச்சை.

துலாம்
சந்திரன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். பணவரவு அதிகரிக்கும் வீண் செலவுகள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஈடுபாடு சற்று குறைந்து காணப்படும். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சுக்கிரனால் கணவன் மனைவி இடையே பண வரவு அதிகரிக்கும். உங்களுடைய உடல்நிலையில் ஏற்பட்ட சோர்வும், மந்தநிலையும் நீங்கும். உறவினர்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். அதிர்ஷ்டமான எண் 4, அதிர்ஷ்டமான நிறம் சந்தன நிறம்.

விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்குள் கேது உடன் இணைந்து சஞ்சரிக்கிறார். வியாபாரத்தில் லாபமும் பணவரவு அதிகரிக்கும். வீண் விரைய செலவுகளை தவிர்க்கவும் சுப செலவுகள் செய்யலாம். செய்யும் தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். வேலைபளு சற்று குறையும். பிள்ளைகளால் பெருமை அதிகரிக்கும். புதிய முடிவுகள் எடுக்கும் முன்பாக யோசித்து முடிவு செய்யவும். அதிர்ஷ்டமான எண் 9, அதிர்ஷ்டமான நிறம் சிவப்பு.

தனுசு
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நிதி நெருக்கடிகள் தீரும். இன்று உங்களுக்கு திடீர் பண வரவு வரும். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். குடும்பத்தில் நெருங்கியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். வீண் விரைய செலவுகளை தவிர்க்கவும். சிக்கனமாக இருப்பது நல்லது. அதிர்ஷ்டமான எண் 6, அதிர்ஷ்டமான நிறம் மஞ்சள்.

மகரம்
சந்திரன் உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு காலையிலே மனமகிழ்ச்சி தரும் செய்திகள் தேடி வரும். வீட்டின் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். வெளியூர் பயணங்களால் லாபம் அதிகரிக்கும். பிரச்சினைகள் தீர உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிர்ஷ்டமான எண் 5, அதிர்ஷ்டமான நிறம் ஊதா.

கும்பம்
சந்திரன் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் உதவிகள் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடியும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும். அதிர்ஷ்டமான எண் 8, அதிர்ஷ்டமான நிறம் நீலம்.

மீனம்
சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பாக்ய ஸ்தான சந்திரனால் மன குழப்பம் நீங்கும். உங்களுக்கு பணவரவு அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். இன்று உற்சாகமான நாள். வேலை செய்யும் இடத்தில் பிரச்சினைகள் வந்தாலும் உடன் வேலை செய்பவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வீண் ஆடம்பர செலவுகளை குறைத்துக்கொள்ளவும். அதிர்ஷ்டமான எண் 4, அதிர்ஷ்டமான நிறம் இளம் மஞ்சள்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *