Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 25, 2021
Today’s Rasi Palan : இன்றைய ராசி பலன் புதன்கிழமை ஆகஸ்ட் 25, 2021
சென்னை: பிலவ வருடம் ஆவணி 09 ஆம் தேதி ஆகஸ்ட் 25,2021 புதன்கிழமை. திருதியை மாலை 04.19 மணி வரை அதன்பின் சதுர்த்தி. உத்திரட்டாதி இரவு 08.48 மணி வரை அதன் பின் ரேவதி. சந்திரன் இன்றைய மீனம் ராசியில் பயணம் செய்கிறார். சிம்ம ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கவனமும் நிதானமும் தேவை. புதன்பகவான் ஆசி நிறைந்த புதன்கிழமையான இன்றைய தினம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.
மேஷம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். திடீர் பண வரவும் அதற்கேற்ப செலவும் வரும். இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்தால் மட்டுமே வெற்றி காண முடியும். புரமோசன் பற்றிய நல்ல தகவல் வரும். சம்பள உயர்வு வரும். செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.
ரிஷபம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இன்று உங்களுக்கு எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். தொழில் வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும்.
மிதுனம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று இல்லத்தில் மங்கள நிகழ்வுகள் நடைபெறும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் வகையில் நடந்து கொள்வார்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். நிதி நெருக்கடிகள் நீங்கும். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும்.
கடகம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படும். பணவரவு நன்றாக. செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபார ரீதியாக பெரிய மனிதர்களின் சந்திப்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.
சிம்மம்
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். அடுத்தவர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை. தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது.
கன்னி
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் ஏற்படும். வேலை தேடுபவர்களுக்கு வெளியூரில் இருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். வங்கியில் சேமிப்பு உயரும். இன்று வீட்டில் பிள்ளைகளால் சுபசெலவுகள் ஏற்படும். நீண்ட நாள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
துலாம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்கிறார். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை அமோகமாக இருக்கும். பிள்ளைகளிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். உறவினர்கள் வழியிலும் அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளால் லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
விருச்சிகம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்கிறார். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு சந்தோஷத்தை தரும். பயணங்களால் நன்மைகள் ஏற்படும். உறவினர்கள் உதவியால் பொருளாதார நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகள் ஏற்படலாம் திடீர் மருத்துவ செலவுகள் வரும் கவனம் தேவை.
தனுசு
சந்திரன் இன்று உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். மன நிம்மதி குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். உற்றார் உறவினர்களிடம் விட்டு கொடுத்து செல்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இன்று குடும்பத்தில் வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். சுப நிகழ்ச்சிகள் ஏற்படும். விரைய செலவுகள் ஏற்படும்.
மகரம்
சந்திரன் இன்றைய தினம் உங்களுடைய ராசிக்கு இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் இருக்கும். பெண்கள் புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். கடன் பிரச்சினைகள் தீரும். பண வருமானம் அதிகரிக்கும் வங்கி சேமிப்பு உயரும்.
கும்பம்
சந்திரன் இன்று உங்களுடைய ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். வருமானம் பெருகுவதற்கான வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆலய தரிசனம் மன அமைதியைத் தரும்.
மீனம்
சந்திரன் இன்றைய தினம் உங்கள் ராசியில் பயணம் செய்கிறார். இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி அதிகரிக்கும். நல்ல செய்திகள் வீடு வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் சுபகாரியங்கள் கைகூடி வரும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.