உத்தர பிரதேச சட்டசபை தேர்தல்: தீவிர பிரசாரத்தை துவக்க பிரியங்கா காந்தி திட்ட
சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கவும், தீவிர பிரசாரம் மேற்கொள்ளவும், பிரியங்கா காந்தி உத்தர பிரதேச மாநிலத்துக்கு இன்று செல்ல உள்ளார்.
லக்னோ,
உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலையொட்டி பாஜக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பணிகளை துவக்கி விட்டன.
இந்நிலையில் உத்தர பிரதேச மாநில காங்., பொதுச் செயலாளர் பிரியங்கா, உ.பி., மாநிலம் லக்னோ நகருக்கு இன்று செல்கிறார். சட்டசபை தேர்தல் பணிகள் குறித்து, காங்கிரஸ் தலைவர்களுடன் விரிவான ஆலோசனை நடத்த உள்ளார்.
இதைத் தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, காங்., நிர்வாகிகள் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகளை சந்திக்கவும் பிரியங்கா திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் இந்த பயணத்தின்போதே தீவிர பிரசாரத்தையும் அவர் துவக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.