திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் மேற்கு ராஜ கோபுர வாயிலில் ஸ்ரீ ராஜ விநாயகர், சண்முகர் ஆலயத்திற்கு பூமி பூஜை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

Loading

புதுச்சேரி, ஜூலை.12,
புதுவை மாநிலம், வில்லியனூர் கொம்யூன் திருக்காஞ்சி காசிக்கு வீசம் மிகுந்த கங்கைவராக நதீஸ்வரர் ஆலயத்தில் மேற்கு ராஜ கோபுர வாயிலில் ஸ்ரீ ராஜ விநாயகர், சண்முகர் ஆலயத்திற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதனை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இவ்விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் தேனீ. C. ஜெயக்குமார் அவர்கள் ராஜ விநாயகர் ஆலயத்தை முழுமையாக உபயம் அளிக்கின்றார் என்று தெரிவித்தார். வழிபாடு திருப்பணி துவக்க விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் முன்னாள் சேர்மன் ரேவதி பர்குணன், ABC சங்கர், செந்தில், மனோகரன், திருக்காஞ்சி நடராஜன், மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை ஆலய அர்ச்சகர் சரவணன் சிவாசாரியார் அவர்கள் சிறப்பாக செய்திருந்தார்

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *