நாகர்கோவிலில் தமிழர்களின் பாரம்பரிய கலையான வர்மக்கலை பயிற்சி… 1200 பேர் ஒரே நேரத்தில் பங்கேற்பு

Loading

கன்னியாகுமரி :- தமிழர்களின் பாரம்பரிய கலைகள் இன்று உலக அரங்கை திரும்பி பார்க்க செய்து உள்ளது என்றே சொல்லலாம் காரணம் கொரோனா நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்ட போது கூட விஞ்ஞானபூர்வமான மருந்துகளை விட நாட்டு வைத்தியங்கள் என்று சொல்லக்கூடிய தமிழ் பாரம்பரிய மூலிகை வைத்தியத் திற்கு மிகச்சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது . அது போன்று இந்த நாட்டினுடைய தமிழர்களின் பாரம்பரியமிக்க கலைகளில் ஒன்றான வர்மக்கலை தற்காப்புக் கலைகள் உலக அளவில் வரவேற்புகளை பெற்று உள்ளது. குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஜப்பான், தாய்லாந்து இங்கிலாந்து போன்ற நாடுகளில் மிக அதிக அளவில் இதற்கு வரவேற்பு உள்ளது, இதற்காக கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள லெமூரியா வர்மக்கலை அமைப்பினர் உலகம் முழுவதும் இணையம் மூலமாக 25 நாடுகளை ஒருங்கிணைத்து அவர்களுக்கு இணையம் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. நாகர்கோவிலில் அந்தப் பயிற்சியின் ஒரு கட்டமாக உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 12 மணி நேரமாக நடைபெற்று வரும் இந்த முயற்சியில் அமெரிக்கா கனடா உள்ளிட்ட 25 நாடுகள் பங்கேற்றுள்ளன அனைவரும் இணையம் மூலம் உலகம் முழுவதும் ஒருங்கிணைத்து உள்ளனர்.சுமார் ஆயிரத்து 200 பேர்கள் ஒரே நேரத்தில் இந்தப் பயிற்சிகளை மேற்கொண்டு உலக சாதனை முயற்சியை மேற்கொண்டுள்ளனர். உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பால் முக்கியமாக தேவைப்படும் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உள்ள வர்ம பாகங்கள் இயங்குவது, உடல் உறுதி பெறுவது உள்ளிட்ட முக்கிய தனிநபர் உடல் பாதுகாப்புகள் கிடைப்பதாக வெளிநாட்டவர் மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்பு தெரிவித்து வருவதாகவும் இதனால் நம் தமிழக பாரம்பரிய வர்ம கலைக்கு வெளிநாடுகளில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளதாகவும் இந்த பயிற்சி ஒருங்கிணைப்பாளர் செல்வன் தெரிவித்தார். இந்த பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட பெண்களும் பங்கேற்றுள்ளனர். உடல் ரீதியாக பெண்களுக்கு ஏற்படும் சிறு சிறு நோய்கள் சமூகப்பாதுகாப்பு தன்னம்பிக்கை ஆண் துணை இல்லாமல் ஒரு மன தைரியத்துடன் தனி நபராக சமூக பாதுகாப்புடன் செல்ல கூடிய அளவிற்குப் பயிற்சி முறைகள் போன்றவை இதில் கிடைப்பதாக இதன் பெண் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். இந்த உலக சாதனை நிகழ்ச்சி சோழர் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதற்கான அதன் கண்காணிப்பாளர்களும் நாகர் கோவிலில் நடைபெற்றுவரும் உலகம் முழுவதும் இணைப்பில் உள்ள இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *