ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள போதை மாத்திரைகளை கைப்பற்றியது சென்னை சுங்கத் துறை

Loading

சென்னை, ஜுன் 30, 2021
இரண்டு தபால் பார்சல்களில் வந்த ரூ.5.25 லட்சம் மதிப்புள்ள, 105
எம்டிஎம்ஏ போதை மாத்திரைகளை சென்னை சுங்கத் துறை
கைப்பற்றியது.
உளவுத் தகவல் அடிப்படையில் சென்னை வெளிநாட்டு தபால்
அலுவலகத்துக்கு வந்த இரண்டு தபால் பார்சல்களை சென்னை
சுங்கத்துறை கைப்பற்றி சோதனை நடத்தியது.
நெதர்லாந்தில் இருந்து ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த
ஒருவருக்கு வந்த இந்த பார்சலில், நீல நிறத்தில் 50 மாத்திரைகள்
ஒரு பிளாஸ்டிக் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. எம்டிஎம்ஏ போதை மாத்திரைகள் என
சந்தேகிக்கப்படும் இவற்றின் மதிப்பு ரூ.2.5 லட்சம்.
இதேபோல், பிரான்ஸில் இருந்து நாகர்கோவிலைச் சேர்ந்த
ஒருவருக்கு வந்த பார்சலில் 55 இளஞ்சிவப்பு நிற மாத்திரைகள், ஒரு
பிளாஸ்டிக் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது
கண்டுபிடிக்கப்பட்டது. எம்டிஎம்ஏ மாத்திரைகள் என சந்தேகிக்கப்படும்
இவற்றின் மதிப்பு ரூ.2.75 லட்சம்.
போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ், பறிமுதல் செய்யப்பட்ட
105 எம்டிஎம்ஏ போதை மாத்திரைகளின் மதிப்பு ரூ.5.25 லட்சம். இது
தொடர்பாக மேலும் விசாரணை நடப்பதாக, சென்னை சர்வதேச
விமான நிலைய சுங்க ஆணையர் தெரிவித்துள்ளார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *