கிருஷ்ணா நிதி நீர் தமிழகம் வந்தடைந்தது : பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் மலர் தூவி வரவேற்பு

Loading

திருவள்ளூர் ஜூன் 17 : ஆந்திர மற்றும் தமிழக அரசின் கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்ட ஒப்பந்தத்தின்படி, ஒரு ஆண்டில், இரு தவணைகளில், முதல் தவணையான ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரையிலான நான்கு மாதங்களில் 8 டி.எம்.சி. நீரும், இரண்டாம் தவணையான ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான நான்கு மாதங்களில் 4 டி.எம்.சி. நீருமாக மொத்தம் 12 டி.எம்.சி. கிருஷ்ணா நீரை தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டில் வழங்க வேண்டும்.இந்த நீராண்டில் ஆந்திர அரசு முதல் தவணையாக 5.187 டி.எம்.சி. நீரையும், இரண்டாவது தவணையாக ஜனவரி 2021 முதல் ஏப்ரல் 2021 வரையிலான மாதங்களுக்கு 2.469 டி.எம்.சி. ஆக மொத்தம் 7.656 டி.எம்.சி. நீரை வழங்கியுள்ளது.

அதன்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து, சென்னை குடிநீர் தேவைக்காக 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு, நேற்று முன்தினம் திருவள்ளுர் மாவட்டம், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்டில் வந்தடைந்தது. அந்த கிருஷ்ணா நீரினை, பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் மற்றும் மாவட்ட ஆட்சியர்.ஆல்பி ஜான் வர்கீஸ் ஆகியோர் மலர்தூவி வரவேற்றனர்.

இந்த நீர் பூண்டி நீர்த்தேக்கம் சென்றடைந்தது.பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழவரம் மற்றும் கண்ணன்கோட்டை – தேர்வாய் கண்டிகை ஆகிய நீர்தேக்கங்களில் கிருஷ்ணா நீர் தேக்கப்படும். இதுவரை அனைத்து நீர்தேக்கங்களிலும் 6.6 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பு உள்ளது. அடுத்த கட்டமாக 8 டி.எம்.சி. தண்ணீர் வரவுள்ளது.

இதில் திருவள்ளுர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் டி.ஜே.கோவிந்தராஜன் (கும்மிடிப்பூண்டி),ஆ.கிருஷ்ணசாமி(பூவிருந்தவல்லி), வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளுர்), க.கணபதி (மதுரவாயல்), ச.சந்திரன் (திருத்தணி), துரை சந்திரசேகர் (பொன்னேரி), மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் கே.வி.ஜி.உமா மகேஷ்வரி, துணைத் தலைவர் தேசிங்கு, பாலாறு வடிநில கோட்ட கண்காணிப்பு பொறியாளர் முத்தைய்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply