அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் பூசாரிகள் இதர பணியாளர்களுக்கு கால நிவாரண உதவித்தொகை வழங்கப்பட்டது..

Loading

திருவண்ணாமலை.ஜூன்.12.

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக்கோயில்களில் நிலையான மாத சம்பளமின்றி பணியாற்றி வரும் 807 அர்ச்சகர்கள். பட்டாச்சாரியார்கள். பூசாரிகள். மற்றும் இதர பணியாளர்களுக்கு. கொரோனா கால நிவாரண உதவித்தொகை ரூ. 4000ம் 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்கள் ஆகிய நிவாரண உதவிகள். மற்றும்
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள். உதவியாளர்கள் .மற்றும் முன்கள பணியாளர்களுக்கு. இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உணவு பொட்டலங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில் உதவிகளை பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ. வேலு. நேரில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவர்,கு. பிச்சாண்டி

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, திருவண்ணாமலை சட்டமன்ற உறுப்பினர் சி, என், அண்ணாதுரை, சட்டமன்ற உறுப்பினர்கள், செங்கம். மு.பெ.கிரி கலசப்பாக்கம் சரவணன், மாவட்ட ஊராட்சித் தலைவர் பார்வதி சீனிவாசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, இந்து சமய அறநிலைத்துறை
திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன், அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் இணை ஆணையர் ஞானசேகர், உதவி ஆணையர் ஜான்சி ,அரசு அலுவலர்கள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், கலந்து கொண்டனர். மேலும் இதனைத் தொடர்ந்து பொதுப்பணி துறை அமைச்சர் திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய. காஞ்சி சாலை. கிரிவலப் பாதை அருகில். அடி அண்ணாமலை காப்பு காட்டில். முத்தமிழ் அறிஞர் டாக்டர். கலைஞரின் 98வது. பிறந்த நாளை முன்னிட்டு. திருவண்ணாமலை மாவட்டத்தில் வனத்துறை சார்பில் ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார் மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் வனத்துறை சார்பில் புதுப்பாளையம் ,போளூர், ஜமுனாமுத்தூர், ஆரணி, ஆகிய காப்புக் காடுகளில் வேம்பு, நாவல், இலுப்பை, தாண்டிரி. புங்கன். ஆச்சான். ஆகிய வகையான ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படுகிறது

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *