திருவள்ளூர் மாவட்ட 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிகையில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது :
திருவள்ளூர் ஏப் 25 : திருவள்ளுர் மாவட்டம், ஆவடி வட்டம், பட்டாபிராம் டி.ஆர்.பி.சி.சி.சி இந்து கல்லூரியில் மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள் / உதவியாளர்கள் மற்றும் தபால் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைக்கிணங்க, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 நிறைவடைந்து வரும் 02.05.2021 அன்று காலை 8 மணி அளவில் பெருமாள்பட்டு ஊராட்சியில் உள்ள ஸ்ரீராம் வித்யாமந்திர் மெட்ரிகுலேசன் உயர்நிலை பள்ளி, ஸ்ரீராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய மூன்று இடங்களில்
10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களுக்கிணங்க கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குச்சாவடிகளுக்கு ஏற்ப 10 முதல் 20
மேஜைகள் அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு மேஜைக்கும் வாக்குகள் எண்ணும் மேற்பார்வையாளர் ஒருவர், வாக்குகள் எண்ணும் உதவியாளர் ஒருவர் மற்றும் நுண் பார்வையாளர் ஒருவர் மற்றும் கட்டுப்பாட்டு கருவியை பாதுகாப்பு அறையிலிருந்து கொண்டு வந்து மேற்பார்வையாளரிடம் அளிக்க ஒவ்வொரு டீமுக்கும் ஒரு பணியாளர் நியமனம் செய்யப்பட்ரிருப்பர். வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் தங்களுக்கு ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ள மேஜையில் வாக்கு எண்ணும் பணிக்கான எழுது பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வைக்கப்படும்.
மேலும் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் அலுவலர்கள் தங்கள் கைபேசிகளை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. மேலும் உங்களுக்கு பயிற்சிகளில் அளிக்கப்படும் அனைத்து விவரங்களையும் முழுமையாக தெரிந்து கொண்டு வாக்கு எண்ணிக்கையை சுமூகமாக நடத்த ஒத்துழைக்க வேண்டும். தபால் வாக்கு பொறுத்த வரையில் 500 வாக்குகளுக்கு ஒரு மேஜை வீதம் 4 முத்ல் 8 மேஜகள் அமைக்கப்படும். மேலும் இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலரின் அனைத்து அறிவுரைகளையும் பின்பற்றி தபால் வாக்கு எண்ணும் பணிகளையும் சுமூகமாக நடத்த ஒத்துழைத்து வாக்கு எண்ணிக்கையினை நல்ல விதமாக நடத்துவதற்கு அனைவரும் ஒன்றினைந்து ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் வெ.முத்துசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி.அனமிகா ரமேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, 10 சட்டமன்ற தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.